நாயகன் படத்தைக் காப்பாற்றியதே இளையராஜாவின் இசைதான்..! பிரபலம் சொன்ன தகவல்

by Sankaran |   ( Updated:2025-01-26 08:30:45  )
nayagan, ilaiyaraja
X

கமலின் திரையுலக வாழ்க்கையில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் ஒரு மைல் கல். அந்த வகையில் அந்தப் படம் எடுக்கப்பட்ட விதம், இசைஞானியின் இசை, எடிட்டர் லெனினின் சாமர்த்தியம் என எல்லாமே படத்தின் வெற்றிக்கு காரணம் என்றே சொல்லலாம்.

இளையராஜா இசையால் மணிரத்னத்தின் நாயகன் படம் காப்பாற்றப்பட்டது என்கிற ரீதியில் பேசியுள்ளார் எடிட்டர் பி.லெனின். அது எப்படின்னு விலாவாரியா பார்க்கலாமா...

தென்பாண்டி சீமையிலே: நாயகன் படத்துல ஒவ்வொருத்தரும் இறந்து போறதையே ஒருமணி நேரமா எடுத்துருப்பாங்க. தென்பாண்டி சீமையிலே சாங்கை இடையில இடையில கொண்டு வரணும்னு சொன்னாங்க. அதனால அந்த சாங்கை இடையில இடையில செருகியாச்சு. 10 நிமிஷ சமாச்சாரத்தை 2 நிமிஷத்துல முடிச்சிடுவேன்.

பின்னணி இசை: படத்துல நிறைய புட்டேஜ் இருக்கு. பின்னணி இசைக்காக அந்த சாங்கைக் கொண்டு வந்ததைப் பார்த்ததும் இளையராஜா அசந்துட்டார். அந்தப் பாட்டாலதான் எனக்குப் பின்னணி இசைக்கே ஒரு ஐடியா வந்தது.

நீ ஒரு காதல் சங்கீதம்: இசையில இளையராஜாவோட பின்னணி இசையைப் பிஎச்டி பண்றவங்களுக்கு அது நல்லா தெரியும். அந்த வகையில் இளையராஜாவோட அந்த இசை படத்தின் வெற்றிக்கு ஒரு பூஸ்டாக இருந்ததுன்னே சொல்லலாம். 'நீ ஒரு காதல் சங்கீதம்' பாடலில் லிப்பே கிடையாது. மற்ற எல்லாமே பிஜிஎம்தான்.

புறாவை பறக்க விட்டு எடுத்தால் நல்லாருக்கும்னு தோணுச்சு. எடிட்டிங் சொல்றதுக்கும் இலக்கியம் தெரியணும். ஷாட்டுக்கு எந்த இடத்துல எந்த மியூசிக்கை வைக்கணும்னு அது தெரியணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நிறைய சீன்கள்: இளையராஜாவே பல படங்களுக்கு லெனின் பாதி சீன் பண்ணிருவாருன்னு சொன்னாராம். அந்த வகையில் நாயகனுக்கு நிறைய சீன்கள் எடுக்கப்பட்ட போதும் அவற்றில் எது தேவை என்பதை சரியாக இணைத்து சூப்பரான படத்தைக் கொடுத்துள்ளார் எடிட்டர் லெனின் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த மெகா ஹிட் படம் நாயகன். கமலுடன் இணைந்து சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார். முக்தா சீனிவாசன் தயாரித்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம். நான் சிரித்தால், நீ ஒரு காதல், அந்திமழை, நிலா அது, தென்பாண்டிச் சீமையிலே ஆகிய பாடல்கள் அற்புதமாக உள்ளன.

Next Story