சிவகார்த்திகேயனோட சம்மதத்தில் நடந்த அந்த விஷயம்...?! விஜய்க்கு ஏன் இந்த பாரபட்சம்?

by SANKARAN |
sk, vijay
X

ஜனநாயகன் படமும், பராசக்தி படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனதில் சிவகார்த்திகேயனுக்கு பங்கு இருக்கிறதா? விஜயின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? ரெய்டு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என பல கேள்விகளுக்கு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

இன்னைக்கு சினிமாத்துறையே ஹீரோக்களின் கையில்தான் இருக்கிறது. டான் பிக்சர்ஸ்கிட்ட எத்தனை ஆயிரம் கோடி பணம் வேணாலும் இருக்கலாம். ஆனா தனுஷ் டேட் கொடுத்தால்தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனா மாற முடியுது. அப்படி இருக்கும்போது படத்துறையே ஹீரோக்களின் கையில் தான் இருக்கு. இன்னைக்கு சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இருக்காரு. அவருதான் ஒரு புராஜெக்டையே டிசைன் பண்றாரு.

யாரு டைரக்டர்? யாரு கேமராமேன்? யாரு இசை அமைப்பாளர்னு எல்லாமே அவர்தான் முடிவு பண்றாரு. ரிலீஸ் டேட்டையும் அவர்தான் முடிவு பண்றாரு. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு விஷயம் நடப்பதற்கு அவர் எப்படி ஒத்துக்கிட்டாரு? இல்லங்க எனக்கு இதுல உடன்பாடு இல்லன்னு சொல்லலாம். ஆகா நம்ம படத்தை வச்சி விஜய் சாரை அடிக்க நினைக்கிறாங்க. அதுக்கு நாம துணை போகக்கூடாது.

அப்போ 3 மாசம் டேட் கொடுக்காம இழுத்தடிப்போம். மதராஸியை முடிப்போம். அப்புறம் குட்பேட் அக்லி படத்து டைரக்டர் படத்தை முடிப்போம். அதுக்கு அப்புறம் தான் இந்தப் படத்துக்கு ரிலீஸ் டேட் கொடுப்போம்னு செஞ்சிருக்கலாமே. எல்லாத்துக்கும் மேல நீங்க இப்படி சொன்னா உங்களை மீறி அவங்க எப்படி அறிவிப்பாங்க?

அப்படின்னா இது சிவகார்த்திகேயனோட சம்மதத்தோட நடந்த விஷயம்தான். ஜனநாயகன் வெறும் மசாலா படம் கிடையாது. அது விஜயின் அரசியலையும் பேசுற படம். விஜய் சினிமாவில் தோற்கடிக்க வைக்க வேண்டும்னு சிலர் சதி பண்றாங்க. அதனால தான் பராசக்தி ரிலீஸ் தேதியை ஜனநாயகன் படத்தோட மோதுவது என அறிவித்தார்கள். அப்போ பராசக்தி படம் பிக்கப் ஆச்சுன்னா ஜனநாயகனுக்கு சிக்கல். அப்படின்னு நினைச்சாங்க. அந்த நினைப்புக்கு இப்போ முட்டுக்கட்டையாகிடுச்சு.


அதே நேரம் விஜய் முதல்வர் ஸ்டாலின் டெல்லி போனது குறித்து அறிக்கை விடுறாரு. ஆனா திரைத்துறையில் இருந்து ஒரு ரெய்டு நடக்கிறது. அவர்கள் உதயநிதியைச் சார்ந்தவர்கள். அப்படிப்பட்ட நிலை இருக்கும்போது அதைப் பற்றி ஏன் விஜய் பேச மறுக்கிறார் என தெரியவில்லை. சினிமாத்துறை மீதான பாசம் அவரைக் கட்டிப் போட்டு இருக்கான்னு தெரியல.

இந்த விஷயத்தில் விஜய் சரியான நிலைப்பாட்டில் இல்லை. டான்பிக்சர்ஸ் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக 1000 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்து அந்தப் பணத்தை படங்கள்ல முதலீடாகப் பண்ணுகிறார்கள் என குற்றச்சாட்டு உள்ளது. அவை தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு நடிச்ச படம் என்பதால் அந்த விஷயத்தை நான் தொடமாட்டேன் என்பது சரியான விஷயமா? இன்னும் சினிமாத்துறை மீது பாசம் இருந்தால் மக்களுக்கு எப்படி நல்லது செய்வீங்க? அது சரியல்ல. அதனால் விஜய் இந்த விஷயத்துல இன்னும் திறந்த மனதோடு அணுகனும் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

Next Story