குடும்பஸ்தன் படத்தோட வெற்றிக்கு இவ்ளோ காரணங்களா? பிரபலம் ரசித்துச் சொன்ன தகவல்

தற்போது திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் குடும்பஸ்தன். மணிகண்டன் நடித்த இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு வந்தவண்ணம் உள்ளது.
இந்தப் படத்துடன் 6 படங்கள் ரிலீஸ் ஆனபோதும் நம்பர் 1 இடத்தில் இருப்பது இதுதான். இந்தப் படத்தின் இவ்ளோ பெரிய வெற்றிக்கு என்ன காரணம்? பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தான் ரசித்த சில தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
குடும்பஸ்தன் படத்துக்கு டைட்டில், பர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர்னு எல்லாமே ஆடியன்ஸ்கிட்ட போய் ரீச்சானது. படமும் நல்லாருந்தது. ஒரு டீமா நல்லா கொண்டு வந்துருக்காங்க. அவங்க உழைப்பை நிச்சயமா பாராட்டணும்.
இன்னொரு பிரச்சனை: எனக்கு ரொம்ப பிடிச்சது ஒரு மிடில் கிளாஸ் பையன் எவ்வளவு சேலஞ்சோடு வாழறான். அவனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும்? நாளைக்கு பிரச்சனை எல்லாம் தீர்ந்துடும்னு நினைக்கும்போது இன்னொரு பிரச்சனை வரும்.
3.5லட்சம்: ஒரு சீன் சொல்றேன். ரியல் எஸ்டேட்ல ஒரு வீடை முடிச்சிக் கொடுப்பாரு. மதிங்கற பேருல மணிகண்டன் நடிச்சிருப்பாரு. 'எனக்கு 2 பர்சன்ட் கமிஷன் கொடுக்கணும்'னு சொல்வாரு. அதுக்கு 3.5லட்சம் கொடுத்துடணும்னும் சொல்வாரு. அப்படி கிடைச்சா கடனை அடைச்சிடலாம்.
ரிஜிஸ்ட்ரேஷன்: அப்பாவுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துடலாம்னு நினைப்பாரு. ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்ச பிறகு வெளியே வருவாங்க. ஆனா அவருக்கு அந்த ஓனர் 1 லட்சம்தான் கொடுப்பாங்க. என்னன்னு கேட்டதுக்கு 'உனக்கு இதே அதிகம்'னு சொல்வாரு.
பொதுவாகவே இப்படித்தான் பேசுவாங்க. ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சிடுச்சு. இனி ஒண்ணுமே பண்ண முடியாது. 'என்னை அவமானப்படுத்துறீயா... உனக்காக நான் அவனை இம்ப்ரஸ் பண்ணி இவ்ளோ ரூபாய்க்கு வாங்க வச்சிருக்கேன். எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்கலாமே'ன்னு இவன் கேட்கிறான்.
அதற்கு ஓனர் 'வாங்க வேண்டியதை வாங்கிட்டுப் போ. இல்லன்னா போடா என்ன பண்ணுவ'ன்னு கேட்பார். மணிகண்டன் அப்பா கேரக்டர்ல சுந்தரராஜன் நடிச்சிருப்பாரு. 'டேய் பரவாயில்லப்பா வாங்கிக்கோ'ன்னு சொல்வாரு.
ஒரு லட்சம்: 'இப்படி எல்லாம் விடக்கூடாது. அவன் கொடுக்க வேண்டியது என் தொகை. நான் சம்பாதிச்சது'ன்னு உணர்வுப்பூர்வமா போராடுவான். அப்படி கார்ல ஏறிப்போகும்போது அந்த ஒரு லட்ச ரூபாயையும் தூக்கி எறிவான். வேணான்னா போடான்னு ஓனர் சொல்வாரு.
படத்தோட கரு: 'என்னடா வந்த பணத்தையும் தூக்கி எறிஞ்சிட்டே'ன்னு சுந்தரராஜன் சொல்வாரு. எல்லாருமே ஷாக் ஆகுவாங்க. 'என் தன்மானம் முக்கியம். என் அடையாளத்தை விட்டுட்டு பணத்துக்காக மிடில் கிளாஸ் வாழ்க்கைங்கறதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வாழணுமா?'ன்னு கேட்பான். இதான் படத்தோட கரு.
ஹைப் இல்லா கிளைமாக்ஸ்: இந்த சமுதாயம் எப்படி என்னை எதிர்பார்க்குது? நான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புறேன்? இதுல ஒரு ஹைப் வச்சி ஹீரோ பணக்காரனா வருற மாதிரி முடிக்கல. உள்ளபடியே யதார்த்தமா முடிச்சிருப்பாங்க.
கடைசில ஒரு சேஞ்ச் இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா அவன் என்ன சொல்வான்? இவ்ளோ பிரச்சனைகளுக்கு நடுவுல நமக்குக் கிடைக்கிற குட்டி குட்டி சந்தோஷங்களை அனுபவிச்சிட்டுப் போறதுதான் வாழ்க்கைன்னு சொல்வான். இது ரொம்ப பிரமாதமான கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.