சாமியார் ஆகும் நடிகைகள் லிஸ்ட்... பின்னணியை அலசும் பிரபலம்... இதெல்லாமா நடந்தது?

by SANKARAN |
bhuvaneshwari, mamtha kulkarni
X

சினிமா உலகில் நடிகைகள் ஏன் சாமியார் ஆகிறார்கள். அவர்களுக்கு அப்படி என்ன மன அழுத்தம் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அலசுகிறார். வாங்க பார்க்கலாம்.

நடிகை புவனேஸ்வரி 90களில் மிகப் பிரபலம். பூனைக்கண் புவனேஸ்வரின்னு தான் எழுதுவாங்க. சர்ச்சைகளிலும் பிரபலம் ஆனவர். அவர் திடீர்னு என்ன பண்ணினாங்கன்னா நான் பெண் சாமியார் ஆகிட்டேன்னு சொன்னாங்களாம். காளி என் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வந்து தேடு. அங்கு நான் இருப்பேன்னு சொன்னது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆன்மிகத்தில் இருப்பதாகவும் 8 ஆண்டுகள் காளியைத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடைசியில தாராபுரம் பக்கத்தில் ஒரு ஊருல கோவில்ல இருக்காங்களாம். அவங்க செய்தி ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது. நடிகை ஸ்ரேயா கோவை ஈஷா மையத்தில் இங்கு வந்துதான் நான் தியானம் பண்ணினேன்.

மன நிம்மதி கிடைச்சதுன்னு சொல்றாங்க. சமீபத்தில் மகாகும்பமேளாவில் நடிகை மம்தா குல்கர்னி காவி உடை போட்டு மொட்டை அடிச்சி மண்டலேஸ்வரர்னு பட்டம் கொடுத்தாங்க. துறவறம் எல்லாம் செய்தாங்க. அது சர்ச்சையானது. அவர் நண்பர்கள்னு ஒரு தமிழ்ப்படத்தில் நடித்தவர். எஸ்ஏ.சி.தான் டைரக்ட் பண்ணினார். சூப்பர்ஹிட் படம். இவர் ஒரு இந்தி நடிகை. போதை வழக்கில் கைதாகி சவுத் ஆப்ரிக்காவில் செட்டானார். இவருக்குப் போய் ஏன் மண்டலேஷ்வர் பட்டம் கொடுக்கலாம்னு கேள்வி எழுந்தது. அதன்பிறகு பட்டத்தைத் திரும்பப் பெற்றார்களாம்.

துறவறம் போவதற்கு பக்தியைத் தாண்டி மன அழுத்தம் இருக்கலாம். தனுஸ்ரீ தத்தா விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்துள்ளார். அவர் உண்மையிலேயே மொட்டை போட்டு ஜடா முடி வளர்த்து சாமியார் ஆனார். அதைக் கேட்டபோது, இந்த சினிமா வாழ்க்கையில் சந்தித்தது கொடூரமான முகங்கள், கேவலமான முகங்கள் என்றும் அவ்வளவு வக்கிரமான ஆள்களையும் சந்தித்து விட்டு ஒருகட்டத்தில் இதானா வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்ததும் சாமியார் ஆனதாக தெரிவித்துள் ளாராம்.

தமன்னா கூட கோவில் கோவிலா போனாங்க. அவரை பொம்பள சங்கின்னுலாம் சொன்னாங்க. கௌஹாத்தியில் ஒரு கோவிலுக்குப் மாலை போட்டுட்டு இருந்தாங்க. சமீபத்தில் கூட ஜோதிகா, சூர்யா அங்கு போய் விளக்கேத்தி விட்டு வந்தாங்க. பூனைக்கண் புவனேஸ்வரியிடம் நான் இன்டஸ்ட்ரில அவ்வளவு கொடுமையை அனுபவிச்சேன்ன சொன்னாங்க.


விபசார வழக்கில் கைதாகும்போது ஒரு பேட்டி கொடுத்தாங்க. நான் விபச்சாரின்னா இவங்க எல்லாம் யாருன்னு ஒரு நாலு நடிகைகளைப் பற்றி சொன்னாங்க. அப்போ சோஷியல் மீடியா எல்லாம் இல்லாத காலகட்டம். ரஜினி வெளியூர்ல இருந்தாரு. அவரை எல்லாம் வரவைச்சிட்டாங்க. கவுண்டமணி, விவேக்கை எல்லாம் கூப்பிட்டாங்க. அரை பக்கம் பேட்டி கொடுத்து கதிகலங்கச் செய்துட்டாங்க. அப்புறம் அவருக்கு வாய்ப்பே கிடைக்கல. அப்படின்னா எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்துருக்கும்? நடிகையைத் தாண்டி அவர்களுக்கு பெரிய மன அழுத்தம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story