எதையோ எதிர்பாத்து இத்தனை வருடம் தத்தளித்த சாந்தினி.. மிஸ் பண்ண படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்

by Rohini |   ( Updated:2025-03-14 16:30:55  )
chandhini
X

சித்து பிளஸ் டூ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. பாக்யராஜ் மூலமாக முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் .அந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார் சாந்தினி .அதன் பிறகு பல படங்களில் அவரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். சாந்தனு சாந்தினி என பெயர் பொருத்தமே பிரமாதமாக இருந்தது. அதனால் ரசிகர்களின் கவனத்தை இந்த இருவருமே பெற்றனர்.

ஆனால் சொல்லி வைத்தார் போல சாந்தனு மற்றும் சாந்தினிக்கு எதிர்பார்த்த அளவு படங்கள் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருவருமே தொடர்ந்து முயற்சித்து வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் சாந்தினி ஒரு சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.

அவ்வப்போது சினிமா விழாக்களிலும் அவரைக் காண முடிகிறது. தொடர்ந்து பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் என்னென்ன படங்களை தவறவிட்டேன் என்பது பற்றி ஒரு தகவலை கூறி இருக்கிறார். அவர் தவறவிட்ட அத்தனை படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட். சுப்பிரமணியபுரம் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க வேண்டியது தாம்.

அதற்கு அடுத்தபடியாக பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தெகிடி, அட்டகத்தி என இன்னும் இவர் சொல்லும் லிஸ்ட் அதிகமாகி கொண்டே போகின்றது. இந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். திரைக்கதையாகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள். ஆனால் இப்படி வாய்ப்புகள் வந்தும் ஏன் இந்த படத்தை அவர் தவறவிட்டார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார்.

இந்த படங்கள் வரும் நேரத்தில் இவருக்கு ஒரு தவறான வழிகாட்டுதல் இருந்ததாம். அதாவது வந்த படங்கள் அனைத்துமே சின்ன பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள். அதனால் பெரிய பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்க சொன்னார்களாம். பண்ணையாரும் பத்மினியும் படத்திலும் இப்படி ஒரு காரணத்தினால் தான் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று சாந்தினி கூறினார்.

சுப்ரமணியபுரம் படத்தின் வாய்ப்பு வந்தபோதும் இவருடைய பெற்றோர்கள் சின்ன பட்ஜெட் படமாக இருக்கிறது. அதனால் வேண்டாம் என்று சொன்னதினால் அந்தப்படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை என கூறினார் சாந்தினி. ஒரு வேளை இவர் சொன்ன இத்தனை படங்களிலும் இவர் நடித்திருந்தால் இன்று இவர்தான் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருப்பார் .இப்படி வந்த ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டு இப்போது வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்கிறாரே என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Next Story