சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்கள் பெரிய பெரிய வெற்றிகளை பெற்று வந்த போது, அடுத்தடுத்து தொடர்ந்து அதனை விட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருந்து நடிக்க தொடங்கினார். அப்படி பாபா படம் வெளியான பிறகு பெரிய வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த 3 வருடம் கழித்து வெளியான திரைப்படம் சந்திரமுகி.
இந்த திரைப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. படம் தாறு மாறு ஹிட். சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 800 நாட்கள் ஓடி பெரும் சாதனை பெற்றது.
இவ்வளவு பெரிய மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சந்திரமுகி 2ஆம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருந்தது. பி.வாசு இப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார்.
இதையும் படியுங்களேன் – விபத்தில் சிக்கிய சமந்தா.! கார் நீருக்குள் மூழ்கியதால் பரபரப்பு.! விவரம் இதோ..,
தகவல் வெளியாகி ராகவா லாரன்ஸ் கூறியதோடு அப்படியே இருந்தது. தற்போது வெளியான தகவலின் படி, இந்த திரைப்படத்தை தயாரிக்கும் முடிவை சன் பிக்ச்சர்ஸ் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேலை இன்னும் அந்த படத்திற்கான வேலைகளை படக்குழு ஆரம்பிக்காமல் இருப்பதால் சன் பிக்ச்சர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், லைகா இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் விரைவில் லைகா தயாரிக்க லாரன்ஸ் நடிக்க உள்ள சந்திரமுகி 2 என அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…