ஒரு பெரிய ஸ்கேம்.. தடுத்து நிறுத்திய டிடிஎஃப் வாசன்! வெளியான இயக்குனரின் வண்டவாளம்

by rohini |
vaasan
X

vaasan

மஞ்சள் வீரன் படத்தைப் பற்றிய பல தகவல்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தில் முதலில் டிடிஎஃப் வாசன் நடிப்பதாக இருந்து இப்போது கூல் சுரேஷ் அந்த படத்தின் ஹீரோவாக மாறி இருக்கிறார். படத்தை செல்லம் இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.

ஆரம்பத்தில் டிடிஎஃப் வாசனை வைத்து படத்தை புரொமோட் செய்த செல்லம் இப்போது கூல் சுரேஷை ஹீரோவாக்கி இருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டிடிஎஃப் வாசன் சரியான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்றும் அவருடைய கவனம் வேறு பக்கம் உள்ளதாகவும் இருப்பதால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார் என செல்லம் பல பேட்டிகளில் கூறி வந்தார்.

ஆனால் உண்மையில் படத்தில் என்னதான் நடந்தது என்பதை பற்றி அந்தப் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த சரவணன் என்பவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். செல்லம் படத்தை இயக்குகிறார் என்றதும் யாருமே படத்தை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் டிடிஎஃப் வாசன்தான் தனக்குத் தெரிந்த இரண்டு பேரை அழைத்து வந்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

ஆனால் படத்தின் பூஜை சமயத்திலேயே செல்லத்தைப் பற்றி அறிந்த அந்த இரண்டு பேர் இது சரிவராது என விலகி விட்டார்களாம். அது மட்டுமல்ல படத்தின் பட்ஜெட் 2 கோடி அளவில் போடப்பட்டிருந்த நிலையில் செல்லம் ஆறு கோடி வரை பட்ஜெட்டில் எழுதி கொடுத்தாராம்.

ஒரு அறிமுக நாயகனை வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கு 6 கோடியா என ஆரம்பத்திலேயே அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஆனால் செல்லத்தை பொறுத்த வரைக்கும் அவருடைய மோட்டிவ் பணம் மட்டும்தான் என சரவணன் கூறியிருக்கிறார். ஏனெனில் இதற்கு முன் திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் 80 லட்சம் வரை செல்லத்திற்கு கடன் இருந்ததாம்.

அதை எப்படியாவது அடைக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் பணம் சம்பாதித்து அந்த கடனை அடைக்க வேண்டும் என்பது போல சரவணனிடமே செல்லம் கூறியிருந்ததாக அந்த பேட்டியில் சரவணன் கூறி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் டிடிஎஃப் வாசன் செல்லத்தை செல்லமாகவே வைத்திருக்கிறார்.

ஏனெனில் அந்த அளவுக்கு செல்லத்துடைய போக்குவரத்து செலவு மற்ற இதர செலவு என அனைத்தையும் டிடிஎஃப் வாசன் தான் செய்து வந்தாராம். இதற்கிடையில் கிரௌடு ஃபண்டிங் ஸ்கேம் என்ற வகையில் ஒரு பெரிய ஸ்கேமே நடந்திருக்கும். அதை டிடிஎஃப் வாசன் நல்லவேளை தடுத்து நிறுத்திவிட்டார் என்றும் சரவணன் கூறினார்.

ஏனெனில் டிடிஎஃப் வாசனை பொருத்தவரைக்கும் அவருக்கு இருக்கும் ஃபாலோயர்ஸ் ஏராளாம். அதனால் செல்லம் டி டி எஃப் வாசனிடம் உன்னுடைய பாலோயர்ஸ் ஒவ்வொருவரிடமும் தலா 100 ரூபாய் வசூலித்தால் கிட்டத்தட்ட நாலு லட்சம் வரை வந்துவிடும்.

அதை வைத்து படத்தை எடுத்து விடலாம் என கூறினாராம். ஆனால் டிடிஎஃப் வாசன் முற்றிலும் இதற்கு மறுத்துவிட்டார். இந்த ஸ்கேமை நல்ல வேளை தடுத்து நிறுத்திவிட்டார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் இன்று டிடிஎஃப் வாசனின் வாழ்க்கையே நாசமாகி போய் இருக்கும் என சரவணன் கூறினார்.

Next Story