Connect with us
vijay (7)

Cinema News

Vijay: யானை படுத்தா சில்லுவண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்! அப்படி ஆகிப்போச்சு விஜய் நிலைமை

Vijay:

கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. விஜய் ஒரு நடிகர். அதை தாண்டி இப்போதுதான் அரசியலுக்குள் வந்தாரு. அவருடைய மாஸ் சினிமாவையும் தாண்டிய மாஸ். இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் தாண்டி அரசியல் சார்ந்து ஆளாளுக்கு கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

சில்லுவண்டுகளின் ஆட்டம்:

பிஜேபி நயினார் நாகேந்திரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முக்கியமாக சத்யராஜ் அவருடன் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட அசீம் என பயங்கரமா கருத்து சொல்லியிருக்கிறார். கருத்து சொல்வதில் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. அதையும் தாண்டி ‘யானை படுத்திருச்சுனா சில்லுவண்டுகள் எல்லாம் அது மேல ஏறி விளையாடும்’னு சொல்லுவாங்க இல்லையா? அப்படித்தான் இருக்கிறது.

ஏன் இதுவரைக்கும் விஜய் கரூருக்கு போகவில்லை என்பதற்கான காரணத்தை நானும் அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ரெண்டு நாள் கரூரில் விஜய் தங்க போவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவர் பார்க்க போவதாகவும் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் நியாயமான அணுகுமுறையும் கூட. ஒரு பக்கம் முன்னாள் நீதியரசர் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசு அனுப்பிய கமிஷன் போய்க் கொண்டிருக்கிறது.

இதுதான் ஃபைனல் முடிவு:

இதில் நயினார் நாகேந்திரன் கூறும் போது ‘இரண்டு பக்கமும் விசாரணை கமிஷன் நடக்கும் போது எப்படி செந்தில் பாலாஜி நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுக்கலாம். அதிகாரிகளும் பிரஸ் மீட் வைத்து பேட்டி கொடுத்து வருகின்றனர். இதற்கு யார் அனுமதி கொடுப்பது? இப்படி இருக்கும் பட்சத்தில் விசாரணை கமிஷன் கொடுக்கும் அந்த அறிக்கை நீர்த்து போய்விடாதா? எப்படி இருந்தாலும் 8 பேர் கொண்ட அந்த குழு கொடுக்கும் அந்த அறிக்கைதான் முடிவாக எடுத்துக் கொள்ளப்படும்’ என்று கூறி வருகிறார்.

இன்னொரு பக்கம் விஜயை பிஜேபி அப்படியே எடுத்துக் கொள்ள முயல்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சத்யராஜ் ‘ நடிகர்களாகிய எங்களுக்கு பெரிய அரசியல் அறிவு எல்லாம் கிடையாது. நடிக்க மட்டும்தான் தெரியும்.’ என முழுக்க முழுக்க விஜயை டார்கெட் பண்ணித்தான் பேசியிருக்கிறார். இதே வார்த்தையை எம்ஜிஆர் இருக்கும் போது சொல்லியிருக்க வேண்டியதுதானே? அவ்வளவு ஏன் கமலுக்கு ஏன் எம்பி பதவி கொடுத்தீங்க என கேட்க வேண்டியதுதானே? என்று இயக்குனர் பேரரசு சத்யராஜுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

விஜய்க்கே ஷாக்:

இன்னொருபக்கம் இயக்குனர் அமீர் ‘ நடிகர்கள் நலத்திட்ட உதவிகள் செஞ்சா வாங்கிக்கோங்க. அதுக்காக நாட்டையே அவங்ககிட்ட கொடுக்காதீங்க’ என பதிவிட்டிருந்தார். இதற்கிடையில் விஜய்க்கு கிடைக்கும் சிறுபான்மையினர் ஓட்டை பிஜேபி அப்படியே எடுத்துக் கொள்ள முயல்கிறது. அமித்ஷாவும் விஜயிடம் ஒரு விளக்கக் கடிதம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது எப்படியெல்லாம் போக போகிறது என விஜய்க்கே தெரியவில்லை. அவருக்கே இது ஷாக்காக கூட இருக்கலாம்.

அதனால்தான் பல அரசியல் கட்சிகளில் அனுபவம் வாய்ந்த எத்தனையோ ரிட்டையர்டு தலைவர்கள் இருக்கிறார்கள். தவெக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாருமே சொல்லும்படியாக இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மற்ற அரசியல் கட்சியில் பழம் திண்ணு கொட்டையை போட்டவர்கள் என எத்தனையோ அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விஜய் தன் கட்சியில் இணைத்துக் கொள்ளலாம். அதுதான் ஒரு அரசியல் அனுபவம்.

என்ன இருந்தாலும் விஜய் ஒரு பெரிய சக்தியாக மாற வாய்ப்பும் இருக்கிறது. தான் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் பெரிய சோதனை வரும் போது ஐயோ சாமி வேண்டாம் என விட்டு ஓடுகிறவர்கள் மத்தியில் என்ன வேணாலும் நடக்கட்டும். பாத்துடலாம் என முடிவுக்கு வந்துவிட்டால் அவங்க ஒரு உச்ச நிலைக்கு வந்துருவாங்க. அதுதான் இப்போது விஜயும் ஃபாலோ பண்ணுகிறார். அதனால் இனி வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம் என இந்த தகவலை செய்யாறு பாலு அவருடைய சேனலில் பேசியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top