இப்பயே சொல்லிட்டோம் அப்புறம் சண்டை போடக்கூடாது!.. ஸ்ட்ரிட் நோட்டீஸ் கொடுத்த விடுதலை 2..!
விடுதலை 2:
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை வெற்றிமாறன் கடந்த 2 ஆண்டுகளாக எடுத்து வந்தார்.
விடுதலை மற்றும் விடுதலை 2 இரண்டு திரைப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார். பாடல் மற்றும் பின்னணி இசைகள் படத்தில் பிரபாதமாக வந்திருக்கின்றது. விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டு அவர் ஹீரோவாக காட்டப்பட்டிருந்தார்.
தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் நடிகர் கென் கருணாஸ், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
விடுதலை 2 ரிலீஸ்:
விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தீவிர ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி ஆகியோர் பல்வேறு youtube சேனல்களுக்கு சென்று படம் குறித்து ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.
தணிக்கை சான்று:
ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு தணிக்கை சான்று வழங்குவது வழக்கம். அந்த வகையில் விடுதலை 2 திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு A தணிக்கை சான்று வழங்கி இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. அவர்களுக்கு டிக்கெட்டும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி.
படக்குழு அறிக்கை:
சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: 'விடுதலை பாகம் 2 திரைப்படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயது உட்பட்ட குழந்தைகள் திரையரங்கில் உள்ளே அனுமதி இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். மீறி டிக்கெட் எடுத்தால் டிக்கெட் கட்டணம் வாபஸ் கிடைக்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று அறிவித்திருக்கின்றது.