தனுஷ்,பிரதீப் ரங்கநாதன் வரிசையில் பாலாதான் இருக்கணும்.. தூக்கி வைத்து கொண்டாடும் பாபா பாஸ்கர்
கே.பி.ஒய் பாலா தனது தனி திறமையால் விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 5 டைட்டில் வின்னர் ஆனார். உடல் குச்சி போல இருந்தாலும் அவரது திறமையால் மக்களின் மனங்களில் உச்சம் தொட்டு விட்டார். தான் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் கூட தனக்கென்று செலவிடாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு கொடுத்து அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் பாலாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஒரு முறை ராகவா லாரன்ஸிடம் எனக்கு ஹீரோவாக வேண்டும் என்று சொல்லி இருந்தார். அதற்கு லாரன்ஸும் கூடிய விரைவில் உன்னை ஹீரோவாக மாற்றுகிறேன் என்று உறுதி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது பாலா ”காந்தி கண்ணாடி” என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடன இயக்குனர் பாபா பாஸ்கர் பாலாவை புகழ்ந்துள்ளார் அதில்,” தனுஷ், பிரதீப் ரங்கநாதன் வரிசையில் அடுத்த பாலாதான் வருவார். ஏனென்றால் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம், பாடல், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எல்லாம் செய்வார்கள். இந்த மொத்த திறமையும் பாலாவிடமும் இருக்கிறது”.
”அவனிடம் நிறைய கதைகள் இருக்கிறது. கூடிய சீக்கிரம் அவனை ஒரு இயக்குனராக பார்க்கலாம். நான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பாலாவை வைத்து ஒரு படம் இயக்குவேன். அந்த படம் சாதாரண படமாக இருக்காது ஹாலிவுட் லெவலில் சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கும். அட்லி அல்லு அர்ஜுன் படம் மாதிரி நாங்களும் ஒரு படம் பண்ணுவோம். இது கண்டிப்பாக நடக்கும். பாலா ஒரு வாழும் சித்தர். என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னாடியே கணிக்க கூடிய நபர். கண்டிப்பாக பாலா இன்னும் மேலே வளர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்”. என்று கூறியுள்ளார்
