2024ல் மறைந்த சினிமா பிரபலங்கள்... மறக்க முடியாத டெல்லி கணேஷ்..!

by Sankaran |
delhi ganesh, padi durai, pradeep vijayan
X

சினிமா பிரபலங்களில் இந்த ஆண்டு (2024)ல் மறைந்தவர்கள் யார் யார் என பார்ப்போம். இவர்களில் சின்னத்திரை, வெள்ளித்திரை, தெலுங்குத்திரை உலகைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அவர்களில் குறிப்பாக டெல்லி கணேஷ், பிரதீப் விஜயன், சீரியல் நடிகர் நேத்ரன், நடிகர் சேஷூ, விஸ்வேஸ்ர ராவ், குட்டி ரஜினி சூரிய கிரண், பசி பட இயக்குனர் துரை மற்றும் தொழிலதிபர் ராமோஜி ராவ் உள்ளனர். இவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

டெல்லி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர். சிறந்த குணச்சித்திர நடிகர். வில்லன், நகைச்சுவை என எந்த வேடம் கொடுத்தாலும் வெளுத்து வாங்குவார். பொறந்த வீடா புகுந்த வீடா, செல்லமே என சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். சிறந்த டப்பிங் கலைஞரும் கூட.

இவர் கமலின் நெருங்கிய நண்பர். அவருடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவதாரம், இந்தியன் 2 என பல படங்களில் நடித்துள்ளார். இந்திய விமானப்படையிலும் பணியாற்றியுள்ளார். இவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.

பிரதீப் கே.விஜயன்

தெகிடி படத்தில் நடித்தவர் பிரதீப் கே.விஜயன். வட்டம், டெடி, லிப்ட், இரும்புத்திரை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இவரும் தனது 45வது வயதிலேயே மாரடைப்பால் காலமானார்.

குட்டி ரஜினி சூர்யா கிரண்

surya kiran

இவர்களில் சூர்யா கிரண் ஒரு இயக்குனர். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகர். இவர் படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகர் நேத்ரன்

இவர் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். டான்சர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர். ஜோடி நம்பர் 1 மற்றும் 3வது, 5வது சீசன், சூப்பர் குடும்பம் உள்பட ரியாலிட்டி ஷோ, பாக்கியலட்சுமி, ரஞ்சிதமே ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பசி பட இயக்குனர் துரை

சிறந்த இந்திய இயக்குனர்களில் ஒருவர். பெண்களை மையப்படுத்திய படங்களான அவளும் பெண்தானே, பசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் சுமார் 46 படங்களை இயக்கியவர். 2 தேசிய விருதுகளைப் பெற்றவர். கமல், ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் இயக்குனரும் இவர்தான். இவரும் உடல்நலக்குறைவால் 2024ல் காலமானார். அப்போது அவரது வயது 84.

ராமோஜி ராவ்

ramoji rao

2024ல் மறைந்த மற்றொரு பிரபலம் ராமோஜி ராவ். இவர் பிரபல தொழில் அதிபர். இவர் திரைப்பட தயாரிப்பு வசதி கொண்ட ராமோஜி பிலிம் சிட்டிக்குச் சொந்தக்காரர். இது ஐதராபாத்தில் உள்ளது.

Next Story