
Cinema News
ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லாமலே அவர் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த கவிஞர் வாலி… அஜித் படத்தில் நடந்த சூப்பர் சம்பவம்…
Published on
அஜித்தின் `தல’ பட்டம் முதன்முதலாக இடம்பெற்ற படம் தீனாதான். அதேபோல், இந்தப் படம் மூலம்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராகவும் அறிமுகமானார். படத்தில் இடம்பெற்றிருந்த வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் தற்செயலாக நிகழ்ந்தது. அதற்குப் பின் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் இருக்கிறது.
யுவன் இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த, காதல் வெப்சைட், நீ இல்லையென்றால் மற்றும் வத்திக்குச்சி பத்திக்காதுடா என கவிஞர் வாலி எழுதியிருந்த 3 பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. முதல் இரண்டு பாடல்களை வாலி விரைவாகவே எழுதிக் கொடுத்திருக்கிறார். அடுத்த பாடலுக்கு ஒரு வாரம் கழித்து வரும்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லியனுப்பியிருக்கிறார்.
அவர் சொன்னபடி ஒரு வாரம் கழித்து முருகதாஸ் வந்திருக்கிறார். அப்போது, `வத்திக்குச்சி பத்திக்காதுடா… யாரும் வந்து உரசுற வரையிலே..’ என்று பாடல் வரிகளைச் சொல்லியிருக்கிறார் வாலி. இதைக் கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இதைப் பார்த்து அதிருப்தியடைந்த வாலி, `என்னய்யா பாட்டு எப்படியிருக்கு… நல்லா இருக்குனா… நல்லா இருக்குனு சொல்லு… இல்லாட்டி நல்லா இல்லைனு சொல்லு… வேற வரிகளை எழுதிக்கலாம்.. இதுக்குதான் புது டைரக்டர்களுக்கெல்லாம் பாட்டெழுதறே இல்லை’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினாராம்.
அதைக்கேட்டு உடனே மௌனம் கலைத்த ஏ.ஆர்.முருகதாஸ், `இல்ல சார். படத்துல ஹீரோ கேரக்டர் எப்பவும் வாய்ல ஒரு தீக்குச்சியை வைச்சுட்டே வர்ற மாதிரி எழுதியிருக்கேன் சார். ஆனா, அது நிச்சயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது கரெக்டா வத்திக்குச்சி பத்திக்காதுடானு நீங்க எழுதியிருக்கதைப் பார்த்ததும் எனக்கு ஷாக் ஆயிடுச்சு சார்’ என்று சொன்னாராம். அப்படி ஹீரோ கேரக்டருக்கென்றே எழுதப்பட்டதுபோல் தற்செயலாக அமைந்த பாடல்தால் மிகப்பெரிய ஹிட்டடித்த வத்திக்குச்சி பத்திகாதுடா பாடல்.
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...