Categories: Cinema News throwback stories

தாத்தா மட்டும் தானா? தனுஷ் மகன் லிங்காவால் அந்த படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு…

வேலையில்லா பட்டதாரி – 2 படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதற்கு முக்கியமான காரணமே தனுஷின் மகன்தானாம். அதற்குப் பின் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

2014-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தனுஷின் வேலையில்லா பட்டதாரி. முதல் பாகத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 2017-ல் படத்தின் இரண்டாவது பாகமாக வேலையில்லா பட்டதாரி – 2 வெளியானது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் வேலையில்லா பட்டதாரி – 2 மூலம் இந்தி நடிகை கஜோல் கோலிவுட்டுக்கு வந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கஜோல், தனுஷின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். முதலில் தனுஷ் – சௌந்தர்யா காம்போ இணைவதாக இருந்த படம் இதுவல்ல. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்தான் பூஜை போடப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன்பிறகே வேலையில்லா பட்டதாரி – 2 உருவானது.

இந்தப் படத்துக்குள் தயாரிப்பாளராக கலைப்புலி தாணு உள்ளேவர தனுஷின் மகன் லிங்கா முக்கியமான காரணமாம். கபாலி படத்தின் புரமோஷன் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவ்வப்போது அவரது வீட்டில் சென்று தாணு சந்திப்பது வழக்கமாம். அப்படி ஒருமுறை ரஜினியை சந்திக்க தாணு சென்றிருந்தபோது, வீட்டில் லிங்காவும் இருந்திருக்கிறார்.

லிங்காவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தாணுவிடம் அவர், `தாத்தாவை மட்டும் வைச்சுதான் படம் எடுப்பீங்களா… அப்பாவை வைச்சு எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்டாராம். தாத்தா மட்டும் தானா? தனுஷ் மகன் லிங்காவால் அந்த படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு…இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த தாணு, அதுக்கென்னப்பா உங்கப்பா ரெடினா உடனே பண்ணிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகே, தனுஷ் – தாணு சந்திப்பு நிகழ்ந்து வேலையில்லா பட்டதாரி – 2 படம் உருவாகியிருக்கிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்