Connect with us

Cinema News

Jayam Ravi : ‘பிரதர்’ கொடுத்த வலி.. இனிமேதான் ஜெயம் ரவி ஜாக்கிரதையா இருக்கனும்

பிரதர் கொடுத்த தோல்வி.. ஜெயம் ரவியை இனிமேலாவது யோசிக்க வைக்குமா

Jayam Ravi : ஜெயம் ரவி மிகவும் நம்பிக்கையோடு இருந்த படம் பிரதர். தீபாவளி ரிலீஸாக இந்தப் படம் வெளியானது. படம் வெளியானதில் இருந்தே ரசிகர்களை எதிர்பார்த்த அளவு கவரவில்லை. மிகவும் பழைய கதை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஓரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் , சிவா மனசுல சக்தி போன்ற படங்களை எடுத்த ராஜேஷ்தான் பிரதர் திரைப்படத்தையும் எடுத்தார்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக வரவேண்டிய படம். அதை இப்போதைய காலகட்டத்தில் எடுத்து போர் அடிக்க வைத்துவிட்டார் என்று படம் பார்த்த அனைவரின் கருத்தாகவே இருக்கிறது. அதே தீபாவளி ரிலீஸாக வெளியான அமரன் திரைப்படம் தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல் ரிலீஸாகும் இடங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். இதே ஜெயம் ரவி நிற்கும் மேடையில் ஒரு காலத்தில் ஆங்கராக இருந்தவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால் இன்று அஜித் , விஜய் வரிசையில் 3 நாள்களில் 100 கோடி கலெக்‌ஷனை அள்ளிய நடிகராக மாறியிருக்கிறார்.

இன்று கோடம்பாக்கத்தில் இருக்கும் பல நடிகர்களின் வயித்தெறிச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தளவுக்கு அவருடைய வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை வரவைத்திருக்கிறது. பிரதர் படத்தை பொறுத்தவரைக்கும் ரிலீஸில் கொஞ்சம் சிக்கல் இருந்ததாகவும் அதற்காக ஜெயம் ரவி தன் சொந்தக் காசில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் படம் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தொடர்ந்து தோல்வியையே பார்த்து வந்த ஜெயம் ரவி இனிமேல் தான் ஜாக்கிரதையாக தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். இதோடு அவருக்கு பிடிச்ச பீடை எல்லாம் போய் இனிமேல் புதுசா அவருடைய கெரியரை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அந்தணன் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top