Connect with us

Cinema News

என் அனுபவத்துல சொல்றேன்! விஜய்க்கு நவரச நாயகன் சொன்ன அட்வைஸ்

விஜய் அரசியலில் வருவது குறித்து நடிகர் கார்த்திக் சில அட்வைஸ்களை வழங்கியிருக்கிறார்.

கோலிவுட்டில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இன்று பல திரையரங்குகள் நஷ்டமில்லாமல் இயங்குகின்றன என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பவர் நடிகர் விஜய்தான். இவருடைய படங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. ரிலீஸ் ஆகி முதல் மூன்று நாள்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்று விடுகின்றன.

இன்று சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இப்படி இருக்கும் போதே எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு அரசியலில் இறங்குகிறார் விஜய். அதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலுக்கு விஜய் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

ஆனால் அது வேண்டாம். மக்கள் நலனே பெரியது என நினைத்து பொதுவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அக்டோபர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிகப்பிரம்மாண்டமான முறையில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்போதுதான் தன்னுடைய கொள்கை என்ன என்பதை விஜய் அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில் விஜய்க்கு நடிகர் கார்த்திக் தேவையான அறிவுரைகளை வழங்கியிருப்பதாக மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதாவது சினிமாவிலும் நடிங்க. அரசியலிலும் இருந்து மக்களுக்கு நல்லதும் பண்ணிக்கொண்டிருங்க. இது என் அனுபவத்துல இருந்து சொல்றேன் என கார்த்திக் விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறாராம்.

கார்த்திக்கை பொறுத்தவரைக்கும் அவரும் சினிமாவில் டாப் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்தான். அவர் மட்டும் நல்ல முறையில் இருந்திருந்தால் சினிமாவிலும் இன்று அவர்தான் நம்பர் ஒன்றாக இருந்திருப்பார். அரசியலிலும் ஒரு மதிக்கத்தக்க தலைவராக மாறியிருப்பார் என செய்யாறு பாலு கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top