Connect with us

Cinema News

கங்குவா படத்துக்காக சம்பவம் செய்த சூர்யா..! மிரண்டு போன நட்டி என்ன சொல்றார் பாருங்க..!

கங்குவா படத்துக்காக சூர்யா செய்த வொர்க் அவுட் பற்றி நட்ராஜ் பகிர்ந்துள்ள தகவல்

ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் பிரம்மாண்டமான படம் கங்குவா. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்திற்காக சூர்யா ரொம்பவே மெனக்கிட்டுள்ளார். இவர் போட்ட எபெக்ட்டைப் பார்த்து மொத்த யூனிட்டுமே ஆச்சரியத்தில் உறைந்து போனதாம்.

பொதுவாகவே சூர்யா தன் படங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறுவதற்காக மேக்கப்பில் இருந்து என்ன விஷயமானாலும் சரி. பயங்கரமாக வொர்க் அவுட் பண்ணுவதில் கில்லாடி. ஏழாம் அறிவு, பிதாமகன், கஜினி படங்களில் அந்த கடின உழைப்பை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் கங்குவா படத்திற்காக மிகப்பெரிய உழைப்பைப் போட்டுள்ளார்.

கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். திஷா பதானி, கிச்சா சுதீப், நட்டி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷனுக்கு மட்டும் 15 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம்.

பீரியடு பிலிமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் வசூல் 2000 கோடியை அள்ளும்னு தயாரிப்பாளர் சொன்னது படத்தின் மீதான அவரது நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்க்க இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. படம் நவம்பர் 14ல் ரிலீஸ் ஆகிறது.

வேட்டையன் படத்திற்காக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் படத்திற்காக சூர்யா போட்ட கடும் உழைப்பு பற்றி மிரண்டு போய் நடிகர் நட்டி பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க…

‘சூர்யா சார் மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகும். அதனால காலைல மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்துடணும். முதல் ஷாட் 6 மணிக்கு எடுப்போம். அதுக்கு அப்புறம் காட்ல லைட் போற வரைக்கும் ஷூட் பண்ணுவோம். எல்லாம் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு ரூமுக்குப் போனா அப்போ கூட சூர்யா சார் வொர்க் அவுட் பண்ணிட்டு இருப்பாரு. அதை முடிச்சிட்டு மறுபடியும் காலைல 4 மணிக்கு எழுந்து ஃப்ரஷ்ஷா வருவாரு’ என்கிறார் நடிகர் நட்ராஜ்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top