Categories: Cinema News

அஜித் பட இயக்குனரிடம் கதை கேட்ட விஜய்!.. அப்ப ரிட்டயரமெண்ட்னு சொன்னது பொய்யா?!…

Vijay ajith: ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் சிவா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் சிறுத்தை. கார்த்தி இரட்டை வேடத்தில் கலக்கி இருந்தார். இந்த படத்திற்கு பின் சிறுத்தை சிவா என்று அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். அடுத்த படமே அஜித்துடன் இணைந்தார். அப்படி உருவான படம்தான் வீரம்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு, அஜித்துக்கும் சிவாவை மிகவும் பிடித்துவிட்டது. எனவே, தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என மூன்று படங்களில் இருவரும் இணைந்தனர். இதில், விவேகம் மட்டுமே ரசிகர்களை ஏமாற்றியது. வேதாளமும், விஸ்வாசமும் சூப்பர் ஹிட் அடித்தது.

குறிப்பாக ரஜினியின் பேட்ட படத்தோடு வெளியான விஸ்வாசம் பேட்டையை விட அதிக வசூல் செய்தது. ஆச்சர்யப்பட்ட ரஜினி விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவை அழைத்து பேசினார். அதன்பின் இருவரும் இணைந்த திரைப்படம்தான் அண்ணாத்த. ஆனால், அந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது.

இப்போது ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற நோக்கில் ஒரு சரித்திர கதையை எழுதினார் சிவா. அதில், சூர்யா நடிக்க முன் வர இப்போது கங்குவா உருவாகியிருக்கிறது. கடந்த 2 வருடங்களாக இந்த படத்தின் வேலைகள் நடந்தது. கங்குவா படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கங்குவா படத்திற்கு பின் மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறார் சிவா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதேநேரம், சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகியும் சிவா இன்னமும் விஜயுடன் இணையவில்லை.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பதில் சொன்ன சிவா ‘விஜய் சாருடன் பல முறை பேசியிருக்கிறேன். சில கதைகள் அவருக்கு பிடித்திருந்தது. சமீபத்தில் கூட அவரை சந்தித்து ஒரு கதை சொன்னேன். ஆனால், இருவருமே பிஸியாக இருந்ததால் அது நடக்காமல் போய்விட்டது’ என சொல்லி இருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பது கடைசிப்படம் என விஜய் சொல்லியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் விஜயை சந்தித்து பேசியதாக சிவா சொல்லி இருக்கிறார். எனவே, அரசியலுக்கு வந்தாலும் விஜய் தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை. விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தால் அவர்களின் ரசிகர்களுக்கு சந்தோஷமே!…

Published by
ராம் சுதன்