Categories: Cinema News

அரங்கத்தில் குஷ்பூ செய்த காரியம்! அனைவரும் திரும்பி பார்த்த தருணம்

சமீபத்தில் திரைப்படத்துறையை சார்ந்த கலைஞர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு பல்வேறு நடிகர், நடிகைகள் தங்கள் திறமைக்காக தேசிய விருதை நேற்று பெற்றுக் கொண்ட செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது. 70வது தேசிய விருது விழாவை நம் நாட்டு குடியரசுத் தலைவர் பல்வேறு பிரிவுகளில் வென்றவர்களுக்கு வழங்கினார். இதில் மூத்த நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது.

விழாவில் மொத்தம் 85 பேர் விருதை பெற்றனர். அதில் 15 பேர் மட்டும்தான் பெண்கள் விருது வாங்கியிருந்தனர். விழாவிற்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் அமைச்சர் பி.எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் சினிமாவில் இருந்து ஒரு சில பேர் விருதை வாங்கியிருந்தனர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் அதே படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை சதீஷ் பெற்றார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏஆர் ரஹ்மான் பெற்றார். அதோடு சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆனந்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவி வர்மன், சிறந்த இயக்குனர் மணிரத்னம், சிறந்த தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் ஆகியோர் விருதுகளை பெற்றனர். இந்த நிலையில் மணிரத்னம் விருதை வாங்கும் போது திடீரென மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நடிகை குஷ்பூ எழுந்து நின்று மிகவும் சந்தோஷத்துடன் கைத்தட்டினார்.

ஏற்கனவே மணிரத்னம் என்றால் குஷ்பூவுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர் விருது வாங்கும் போது மட்டும் எழுந்து நின்று கைத்தட்டியதை அருகில் இருந்த அத்தனை பேரும் பார்த்து வியந்தனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்