தமிழ் சினிமாவில் ஒரு நடிப்பு அசுரனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தை இயக்கியதும் தனுஷ் தான். இப்போது இயக்குனராகவும் ஒரு படி முன்னேறி இருக்கிறார் தனுஷ்.
அசுரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பில் ஒரு பெரிய முன்னேற்றம் இருப்பதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை எல்லாம் ஒரு உந்துதலாக எடுத்துக் கொண்டு இன்று அனைவரும் பாராட்டக்கூடிய நடிகராக மாறி இருக்கிறார்.
அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்திலும் படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்திய அளவில் நன்கு அறியப்படும் நடிகர்களில் தனுஷும் ஒருவர்.. இந்த நிலையில் நடிகை மந்த்ரா தனுஷை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறும் போது நான் பார்த்த தனுஷ் வேற. நீங்க இப்போ பார்க்கிற தனுஷ் வேற. அவர் தனுஷ் கிடையாது. வெங்கட் பிரபு. அதாவது அவருடைய இயற்பெயர் வெங்கட் பிரபுவாம். இருவருமே பள்ளிப்பருவ நண்பர்களாம். ஐந்தாம் வகுப்பு வரை தனுஷுடன் சேர்ந்து படித்தாராம் மந்த்ரா.
பள்ளியில் படிக்கும் பொழுது அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடித்தமான ஒரு மாணவராக தனுஷ் இருந்தாராம். அனைவருமே தனுஷை தான் அழைத்து புத்தகத்தை படிக்க சொல்லுவார்களாம். அந்த அளவுக்கு மிகவும் திறமையான மாணவர் தனுஷ். ஆங்கிலத்திலும் அதிகளவு அறிவு அதிகம் என மந்திரா கூறினார்.
மேலும் மந்திரா குரூப் லீடராக இருந்தாராம். அந்த குரூப்பில் ஒரு மாணவனாக தனுஷ் இருந்தாராம். அதனால் மந்த்ராவிடம் அடிக்கடி அடியும் வாங்கி இருக்கிறாராம். திட்டும் வாங்கி இருக்கிறாராம் தனுஷ். சமீபத்தில் ரி யூனியன் என்ற பெயரில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
அப்போது மந்த்ராவும் வந்தாராம். தனுஷும் மந்த்ராவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டார்களாம். பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார்களாம். இவ்வாறு மந்த்ரா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…