Connect with us

Cinema News

என்னை யாரும் ஏமாத்தல.. விஜய் படத்தில் நடந்தது இது தான்! நடிகை கொடுத்த பேட்டி

விஜய் படத்த அப்படி சொல்லவே இல்லை.. ஒரு பேட்டியால் படாத பாடுபட்ட நடிகை

தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இன்று கோலிவுட்டின் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அவருடைய படங்களுக்கு என நல்ல ஓப்பனிங் ஆரம்பத்திலிருந்து இதுநாள் வரை இருந்து வருகிறது.

தற்போது விஜய் அவருடைய 69 ஆவது படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய கடைசி படமான 69ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது.

இந்தப் படத்தை எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஆரம்பிக்க இருக்கிறார் விஜய். தற்போது அவருடைய கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதற்கான வேலைகளில் தான் அவருடைய கட்சித் தொண்டர்கள் முழுவதுமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை மந்த்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் லவ் டுடே படத்தில் விஜயுடன் ஒரு டூயட் கூட ஆட விடாமல் என்னை மறுத்து விட்டனர். ஏமாற்றி விட்டனர் என்று கூறியதாக சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வந்தன.

உண்மையில் நான் அப்படி சொல்லவே இல்லை என மந்த்ரா கூறி இருக்கிறார். அதாவது லவ் டுடே படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பேன். அந்த நேரத்தில் நான் ஹீரோயின் ஆகவும் நடித்து வந்த காலம். அதனால் விஜயுடன் கனவிலாவது டூயட் பாடுவது மாதிரி ஒரு பாடல் காட்சி அமைந்திருந்தால் நன்றாக இருக்குமே என நானே நினைத்துக் கொண்டேன் என்று தான் அந்த பேட்டியில் கூறி இருந்தேன்.

ஆனால் அந்த படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள் என நான் சொல்லவே இல்லை. எங்கு பார்த்தாலும் சோசியல் மீடியாவில் என்னை ஏமாற்றி விட்டார்கள், என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று நான் சொன்னதை போல செய்திகள் வெளிவந்தது. இதை பார்த்த என் கணவர் கூட ‘உன்னை யார் ஏமாற்றினார்’ என கேட்டார். நான் அப்படி சொல்லவே இல்லைங்க என அவரிடம் கூறினேன். ‘உண்மையில் என்னை ஏமாத்தல. நானாக அப்படி நினைத்துக் கொண்டேன்’ என இப்போதைய ஒரு பேட்டியில் மந்த்ரா கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top