Connect with us

Cinema News

நா அடிச்சிடுவேன்னு பயத்துல தான் அந்த கதையே சொன்னாரு… VP குறித்து சினேகா சொன்ன சீக்ரெட்…!

நான் எங்க அடித்து விடுவேனோ என்ற பயத்தில் தான் கோவா திரைப்படத்தின் கதையை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார்.

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வந்தார். குழந்தைகள் பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்றி கொடுக்கும் சினேகா தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் கடைசியாக கோட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று சறுக்கல்களை சந்தித்தாலும் ஒட்டுமொத்தமாக 455 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். நடிகை சினேகா விஜய் உடன் நடிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே தமிழ் சினிமாவில் விஜய் சினேகா காம்பினேஷனில் வெளியான வசீகரா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சினேகா காம்பினேஷன் கோட் படத்தில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சினேகா நடிப்பது என்பதும் இது முதல் முறை கிடையாது. வெங்கட் பிரபு ஏற்கனவே இயக்கி மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த கோவா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடிகை சினேகா கமிட்டானது குறித்து அவரே கூறியிருக்கிறார். சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட சினேகா இந்த ரோலில் தன்னை நடிக்க வைக்க வெங்கட் பிரபு கதை சொன்ன விதம் குறித்து பேசி இருந்தார்.

இந்த படம் தொடர்பாக வெங்கட் பிரபு என்னை அணுகியபோது 10 அடி தூரம் தள்ளி நின்று கொண்டார். எங்கு இந்த கதையை சொன்னால் தனக்கு அடி விழுந்து விடுமோ என்ற பயத்தில் தான் கூறினார். ஏனென்றால் இது நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதால் மிகவும் தயங்கி கூறினார். ஆனால் இந்த கேரக்டர் புதிதாக இருந்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன். மேலும், இந்த திரைப்படத்தில் தனது ஒர்க் அவுட் காட்சி மிகவும் பிடித்திருந்தது. கோவா திரைப்படத்தில் தான் நடித்தது சிறியதாக இருந்தாலும் அந்த படம் தனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்ததாக சினேகா தெரிவித்திருந்தார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top