Connect with us

Cinema News

விஜயை விட 3 மடங்கு அதிகமா சம்பளம் கேட்ட அஜீத்…! அட… இது எப்போ நடந்துச்சு?

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது சரி தான்… அதுக்காக இப்படியா?

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு அஜீத் கேட்ட சம்பளம் குறித்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

காதல் ரோஜா படத்தை அஜீத் சாரை வைத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். 96 ஆரம்ப காலகட்டத்துல வான்மதி படத்துல அஜீத் சார் நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ அப்பா அவருக்கிட்ட நீங்க ஒரு படம் எங்க பேனர்ல நடிக்கணும்னு சொன்னாரு. அதுக்கு அஜீத் 10லட்சம்னு பெரிய தொகையை சம்பளமா கேட்டாரு.

அப்போ விஜய்க்கு விஷ்ணு படத்துல 3 லட்சம் தான் சம்பளமா கொடுத்தோம்னு சொன்னோம். அப்போ அஜீத் அந்த சம்பளத்துல இருந்து இறங்கி வரல. அப்போ இந்த சம்பளத்தைக் கொடுத்தா அதுக்கு ஏத்த வியாபாரம் ஆகுமான்னு அந்தத் தயக்கம் எங்களுக்கு இருந்தது. அதுக்கு அப்புறம் அவரைத் தொடர்பு கொள்ளல.

அதுக்கு அப்புறம் ஹீரோவா யார் போடலாம்னு நினைக்கும்போது கே ஆர்.சார் அந்தப் படத்துக்கு டைரக்டர். அவர் சூர்யா சாரை சொன்னாரு. அப்போ சூர்யா சார் ஆடிஷனுக்கு எல்லாம் வந்தாரு. ஆனா அதே நேரத்துல அவர் நேருக்கு நேர் படத்தை அப்போ தான் கமிட் ஆகிட்டாரு. அப்புறம் அவர் நேரடியா வந்து என்னால இதுல பண்ண முடியலன்னு சொன்னாரு. அப்புறம் பிரசாந்த்தை நடிக்க வைக்கலாம்னு பார்த்தோம்.

அவருக்கு 10 லட்சம் சம்பளமா பேசி 2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணினோம். ஆனா அவர் அந்த நேரத்துல ஜீன்ஸ் படத்துல இருந்து ஷங்கர் போட்ட கண்டிஷனால வெளிய வர முடியாமப் போச்சு. அதனால அவரும் நடிக்க முடியாம வாங்கின அட்வான்ஸை தியாகராஜன் சாருக்கூட வந்து நிலைமையைச் சொல்லி திருப்பிக் கொடுத்துட்டாரு. அதுவும் கேன்சலாச்சு.

விஷ்ணு படத்துல விஜய் நடிக்க 3 லட்சம் சம்பளம் வாங்கினாரு. அஜீத் நடிக்க இருந்து அப்புறம் சூர்யா நடிக்க இருந்து அப்புறம் பிரசாந்த் நடிக்க இருந்து அப்புறம் ஒரு புதுமுகத்தைப் போட்டு நடிக்க வச்சோம். அதனால எங்களுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top