Cinema News
அஜித்துக்கே இந்த நிலைமையா? பில்லா படத்தில் நடந்த சூப்பர் சம்பவம்… மேட்சா இருக்கே…
அஜித்தின் ஹிட் படங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது பில்லா திரைப்படம்.
Ajith: அஜித் நடிப்பில் மாஸ்ஹிட் திரைப்படமாக வெளிவந்த பில்லா குறித்து அப்படத்தின் நடன இயக்குனர் கல்யாண் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பில்லா படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்ததை போல இப்படத்திலும் அஜித் இரட்டை வேடத்தில் கலக்கி இருந்தார். அதிலும் பில்லா அஜித்தாக அவரை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நயன்தாரா பிகினியில் அதிர வைத்து இருப்பார்.
இப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் மிக முக்கிய இடம் பிடித்திருந்தது. அந்த வகையில் மை நேம் இஸ் பில்லா பாடலின் ரீமேக்கும் ரசிகர்களிடம் பெரிய ஹிட் அடித்தது.
இப்பாடலுக்கு கோரியோகிராப் செய்தது கல்யாண் மாஸ்டர்தான். அவர் ஷூட்டிங் சமயத்தில் பாடலே தயாராகி வரவில்லையாம். ஆனால் வரிகள் மட்டும் தெரியும் என்பதால் டிக் டிக் என்ற இசையை மட்டுமே வைத்துக்கொண்டு பாடலே இல்லாமல் ஷூட்டிங்கையே முடித்தார்களாம்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். ஆறு பாடல்களை கொண்ட இப்படத்தில் இரண்டு ரீமிக்ஸ் இருந்தது. அது உண்மையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பு செய்திருந்தார். அதில் ரீமிக்ஸை யுவன் இணைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.