Connect with us

Cinema News

விஜய் மாநாட்டுக்கு அஜீத் ரசிகர்கள் போட்ட வீடியோ…. யாருடன் கூட்டணி போட்டால் லாபம்?

விஜய் நடத்தும் மாபெரும் மாநில மாநாடு குறித்தும் அரசியலில் அவர் யாருடன் கூட்டணி போடலாம் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

விஜய் மாநாட்டில் கூட்ட நெரிசல் இருக்கும். ‘யாராவது காலில் மிதித்து விட்டால் கடவுளேன்னு யாரும் கத்திடாதீங்க. விஜய் ரசிகர்கள் உங்களை சும்மா விடமாட்டாங்க. அது ஒரு பெரிய களேபரமாகிடும்’னு அஜீத் ரசிகர்கள் அப்படிங்கற பேருல வீடியோ ஒண்ணு வைரலாகுதாம். இது ஒரு அசிங்கமான வேலை.

கோடிக்கணக்கான செலவில் மாநாட்டுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வேலைகளைப் பார்க்குறதுக்கு மட்டும் தினமும் 12ஆயிரம் பேர் பார்க்க வர்றாங்களாம்.

நிலம் கொடுத்த விவசாயிகளையும் விஜய் சந்தித்து சின்ன விருந்து கொடுக்கப் போகிறாராம். விஜய் உள்ளே நுழைந்ததும் 100 அடி உயர கொடியை ஏற்றி விட்டுத் தான் மேடைக்குப் போகிறாராம். அந்தக் கொடி உள்ள இடத்தை மட்டும் 10 வருஷத்துக்கு எழுதி வாங்கி இருக்கிறாராம்.

இந்திய அளவில் கூகுள்ள போய் அதிகளவில் சர்ச் பண்ணிருக்காங்க. அது எந்த இடம்னா விக்கிரவாண்டி வி சாலை. அதை வட இந்தியாவில் விசாரிக்கும் போது அது விஜய் கட்சிக்காக மாநாடு நடத்தப் போற இடம்னு தெரிஞ்சதும் ஆச்சரியப்பட்டுருக்காங்க.

கடந்த 10 நாளாக அதிகம் பேர் சர்ச் பண்ணிருக்காங்க. மாநாட்டு பந்தலுக்குள் 1 கிலோ மீட்டருக்கு ரேம்ப் வாக்கிற்காக ஒரு மேடை போடப்பட்டுள்ளதாம். அதுல நடக்கும்போது விஜய் பேசிக்கிட்டே போகப் போறாரு. மாநாட்டுக்குப் பின்புலமாக சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் கட்சியினரும் இருக்காங்களாம்.

விஜய் பேசுவது எதைப் பற்றி என்றால் கண்டிப்பாக குறையை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கும். பாஜகவில் உள்ள நடிகை கவுதமி அதிமுகவில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருக்கிறார். அவரிடம் விஜயைப் பற்றிக் கேட்ட போது ஜனநாயக நாட்டில் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம்.

வரட்டும். இப்போ தான வந்துருக்காரு. அவரோட கொள்கைகளைப் பற்றிச் சொல்லட்டும் பார்க்கலாம்னு சொல்லி இருக்கிறார். கொடி பக்கத்திலேயே அலுவலகமும் இருக்கப் போகிறதாம். அக்டோபர் 27ம் தேதி மாநாட்டில் இருந்து அவரோட தீவிர அரசியல்ல இறங்க உள்ளாராம். ஒரு பக்கம் அரசியல். இன்னொரு பக்கம் படம். அரசியல்ல நாம் செயல்வீரர்களாக களத்தில் இறங்க வேண்டும் என்பது தான் விஜய் சொல்லும் விஷயம்.

2026ல விஜய் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. அதுக்கு அடுத்த தேர்தலில் வாய்ப்பு இருக்கு. ஓட்டைப் பிரிக்கலாம். பலத்தைக் காமிக்கலாம். இந்த நேரத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்தால் இளைஞர்களின் வாக்குகளை அதிகமாக அள்ளலாம். அதனால தான் சீமான் என் தம்பி என்னை எதிர்த்தாலும் பரவாயில்லை. அவருக்கு ஆதரவா தொடர்ந்து குரல் கொடுப்பேன்னு அடிக்கடி சொல்றாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top