Connect with us

Cinema News

நிறைய பேரு ஏமாத்துனதால… இப்போ அதைச் செய்யறதுல்ல அல்டிமேட் ஸ்டார்..! பிரபலம் சொல்றதைக் கேளுங்க…

‘தல’ என்று தமிழ்சினிமாவில் பெருமையாக சொல்லப்படும் நடிகர் அஜீத்குமார். இவரது படங்களில் இவர் நடந்து வந்தாலே அழகு தான். ரஜினிக்குப் பிறகு இவரது நடையை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. படம் வரும் பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9, 2025ல் ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. இந்தப் படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அஜீத்தே விடாமுயற்சி இழு இழுன்னு இழுத்துக்கிட்டே போகும்போது இந்தப் படத்தை முதலில் ரிலீஸ் செய்யச் சொன்னாராம். இப்போது கார் ரேஸிலும் கலந்து கொள்கிறார். அஜீத்தைப் பொருத்தவரை அவரது வழி தனி வழி தான் போல. அதை ரியல் லைஃபிலும் கடைபிடித்து வருகிறார்.

பிரபல நடிகர் பாவா லட்சுமணன் அல்டிமேட் ஸ்டார் அஜீத் பற்றி ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அது என்னன்னு பாருங்க…

அஜீத் சார் கூட அவர் ஒர்க் பண்ணும்போதே அவர் 250 ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இருந்தாராம். அதே மாதிரி காசை எல்லாம் யாருக்கும் கையில கொடுக்க மாட்டாராம். பணத்தைக் கட்டி ஆபரேஷன் பண்ணி விட்டுருவாராம்.

நிறைய பேரு அந்த மாதிரி ஏமாத்திட்டாங்களாம். அதனால காசை கையில கொடுக்க மாட்டாராம். ஆனா இன்னமும் அந்த மாதிரி உதவி செஞ்சிக்கிட்டே இருக்காராம். அது மட்டுமல்லாமல் பாவா சொல்லும்போது, எனக்குத் தெரிஞ்சு இப்போ 1000 பேருக்கு மேல உதவி இருப்பாருன்னு நினைக்கிறேன். அவர் செய்வது வெளியே தெரியாது. கொடுக்கும்போது அவங்க கிட்டேயே தயவு செய்து வெளியே சொல்லாதீங்கன்னு சொல்வாராம் அஜீத். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. விஸ்வாசம் படத்திற்குப் பிறகு பொங்கலுக்கு அஜீத்தின் படம் வருவதால் ‘தல’ பொங்கல் தான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top