தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்த கோலிவுட்டில் இருக்கிறார்கள். உலகங்கெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராகவும் அஜித் இருந்து வருகிறார். சமீப காலமாக ரசிகர்கள் பலரும் அஜித்தே கடவுளே என கூறி மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல யூடியூப்பர்களான கோபி சுந்தர் இவர்களும் ஒரு விழாவிற்கு சென்று அஜித்தே கடவுளே எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். அந்த அளவுக்கு அஜித்தை கடவுளாகவே இப்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவருடைய நடிப்பில் விடா முயற்சி திரைப்படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் படம் எப்போது ரிலீஸ் என இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் அவ்வப்போது தனது செல்பி புகைப்படங்கள் வீடியோக்கள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்து வருகிறார்.
இதுவரை அஜித்தின் எந்த ஒரு புகைப்படமும் இணையதளங்களில் வெளியாகாத நிலையில் சமீப காலமாக அவருடைய ஒவ்வொரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று கூட அவருடைய ஒரு செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்காகி வந்தன.
மிகவும் ஸ்டைலான லுக்கில் அஜித் அந்த புகைப்படத்தில் இருப்பது பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில் அஜித் தன் ரசிகை ஒருவரிடம் வீடியோ காலில் பேசிய ஒரு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதில் அந்த ரசிகையிடம் நல்லா இருக்கீங்களா? கண்டிப்பா வரேன்மா என சொல்லி புன்முறுவலுடன் பேசிய அந்த வீடியோ தான் இப்போது பெரும் வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DBQeZI0Pwd3/?igsh=MW11MXAzdmtuaTNsaQ==
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…