அஜித்தின் விடாமுயற்சி படமும் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படமும் ஒன்றாக மோத இருக்கின்றன என்ற செய்தி இணையத்தில் சமீபகாலமாக வைரலாகி வருகின்றன .அஜித் மகிழ்திருமேனி கூட்டணியில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து இப்போது ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
படத்தின் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அர்ஜூன், ஆரவ் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் ஆரம்பம் முதலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தன. ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸில் இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் தயாராகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் பிஸினஸ் எந்தவிதத்திலும் நடக்கவில்லை என்பதால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
அதனால் அதே தேதியில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி 10 ஆம் தேதி சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துவிட்டார்கள். இது ஒரு வகையில் அஜித்தின் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
பொதுவாகவே ஆந்திராவில் அஜித் படங்களுக்கு அந்தளவு மவுசு கிடையாது. அதனால் கேம் சேஞ்சர் படம் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நினைத்தாலும் வெளி நாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் அஜித்தை விட ராம் சரண் படத்திற்குத்தான் ஹைப் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது தெலுங்கு படங்களுக்கு ஆர்வம் அதிகம் காட்டுவார்களாம். அதனால் அஜித்தின் எந்தப் படம் வெளியானாலும் ஒரு விதத்தில் சில பிரச்சினையை சந்திக்கும் என்றே தெரிகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…