இந்திய சினிமாவிலேயே பலரும் அறியப்படும் ஒரு ஸ்டாராக இருந்து வருபவர் ராக் ஸ்டார் அனிருத். இவர்தான் இப்போது உண்மையான பேன் இந்தியா ஸ்டார் ஆக இருக்கிறார். இன்று அனிருத் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் பட்சத்தில் அவரைப் பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழில் 3 என்ற படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்த அனிருத் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அனிருத் சினிமாவில் வருவதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். தனுஷும் ஒரு மேடையில் கூறும்போது கீபோர்டு வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டே இருப்பார் அனிருத். சிறுபிள்ளையிலிருந்து அவரை நான் பார்க்கிறேன் .
சரி சினிமாவிலும் அவர் வரட்டுமே என்ற எண்ணத்தில் தான் 3 படத்தில் அவரை இசையமைக்க வைத்தேன் என்பது போல ஒரு பேட்டியில் கூறி இருப்பார். தனுஷ் போட்ட அந்த விதைதான் இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்திய சினிமாவில் இருக்கும் அனைத்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்போது அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இவருடைய இசைக்கு ஒட்டுமொத்த மக்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய லைன் அப்பில் இருக்கும் படங்களின் பட்டியல் இன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்க்கும் போது பார்க்கும் ரசிகர்களுக்கு தலை சுற்றுகிறது. அந்த அளவுக்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார் அனிருத். இதோ அந்த படங்களின் விவரம்:
ஷாரூக்கான் நடிக்கும் ‘கிங்’, ரஜினியின் நடிப்பில் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர்2’, கமலின் நடிப்பில் ‘இந்தியன்3’, அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’, விஜய் நடிப்பில் வரவிருக்கும் ‘தளபதி69’, சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, பிரதீப் ரெங்கநாதனின் ‘எல்ஐகே’, கவினின் ‘கிஸ்’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவருடைய 12வது படம், சல்மான் மற்றும் அட்லீ இணையும் படம்,கௌதம் தின்னானூரியின் மேஜிக், ப்ரித்விராஜின் டைசன், நானியின் நானிஓடேலா2, ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் போன்ற படங்கள்தான் அனிருத்தின் கைவசம இருக்கும் படங்களாகும். கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் இவருடைய ஆதிக்கம் இருக்கிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…