Cinema News
விஜயை நம்பி சினிமா இல்ல! அவர் போயிட்டா ஆளா இல்ல? பொரிஞ்சு தள்ளிட்டாரே
திருப்பூர் சுப்பிரமணியன் விஜயை குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
கோலிவுட்டில் இன்று ஒரு மாபெரும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவருடைய படங்களுக்கு இன்றுவரை நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவிலேயே விஜய்தான் அதிக சம்பளம் வாங்கக் கூடிய நபராகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக அவர் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோட் திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் மற்ற மாநிலங்களில் சுமாரான கலெக்ஷனையே அள்ளியது. விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த கலெக்ஷன் வரவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் விஜய் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். கூடவே பல நட்சத்திர பட்டாளங்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் பக்கா அரசியல் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக எச்.வினோத் படம் என்றாலே ஏதாவது ஒரு வகையில் அரசியலை பேசும் படமாகத்தான் இருக்கும். அதை போல் விஜயின் கடைசி படம் என்பதால் படத்தில் ஒரு தரமான அரசியலை எச்.வினோத் பேச வைப்பார் என்றே தெரிகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களை தாண்டி தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் சினிமாவை விட்டு போவது எங்களுக்கு பெரும் நஷ்டம் என புலம்பி வந்தார்கள்.
ஆனால் திருப்பூர் சுப்பிரமணியன் சினிமா என்பது ஒரு ஆளை நம்பி மட்டும் இல்லை. எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்கு அடுத்தபடியாக ரஜினி கமல் போன்றவர்கள் வந்தார்கள். அதை போல் விஜய் அஜித்துக்கு பிறகு அடுத்தடுத்து நடிகர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். அதனால் நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள்.
ஏன் சமீபத்தில் வெளியான வாழை படத்தை மக்கள் கொண்டாடவில்லையா? லப்பர் பந்து படமும் இன்று வரை ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் கதையை நம்பி மக்கள் படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டால் சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைத்து படங்களையும் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.