Connect with us

Cinema News

தனுஷின் ராயன் படம் செய்த சாதனை… இவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த கெத்து வராது!

தனுஷின் வாட்டர் பாக்கெட் பாடல் செய்த சாதனை பற்றிய தகவல

ஒரு சாதனையை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்றால் அதில் கெத்து தனுஷ் தான். 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த தமிழ்ப்பட பாடலில் தனுஷ் படங்கள் 3 முறை இடம்பிடித்துள்ளன. தனுஷின் மாரி 2 படத்தில் வரும் ரௌடி பேபி பாடல் அதிக பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தனுஷின் ராயன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் வரும் வாட்டர் பாக்கெட் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

அதாவது கடந்த ஆகஸ்டு 5ம் தேதியே 100,084,625 பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்தப் பாடல் வெளியான 5 நாள்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவரது ‘ஒய் திஸ் கொலை வெறி பாடல் இப்படி அதிகம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடலும் 2011ல் பாடல் வெளியான சில நாள்களிலேயே பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பெரிய சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இது 3 படத்தில் இடம்பெற்றது. இசை அமைப்பாளர் அனிருத். இந்தப் பாடலை எழுதியவர் தனுஷ் தான்.

அதுவும் ஆறே நிமிடங்களில் எழுதி அசத்தியுள்ளார். பாடலில் எக்கச்சக்கமான ஆங்கில வார்த்தைகளைப் போட்டு இருந்தாலும் சிறுவர்களும் ரசிக்கும் வகையில் எழுதியிருந்தார். அவரே பாடியும் அசத்தினார். இந்தப் பாடல் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது.

அதே போல இப்போது ராயன் படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். அதே போல இந்தப் படத்தில் தனுஷ், ஏ.ஆர்.ரகுமான் பாடிய அடங்காத அசுரன் நான் பாடலும் மாஸ் தான். மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடல் 1பில்லியன் (100 கோடி) பார்வையாளர்களைக் கடந்து இன்றும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top