சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவிற்கு அமரன் திரைப்பட குழு உட்பட பலரும் கலந்து கொண்டனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிக்கும் திரைப்படம் அமரன். இந்தப் படத்தை கமல் நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மையை கதை சிலவற்றை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரசியமான விஷயங்கள் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது அனைவர் மத்தியில் இப்போது வரை பேசு பொருளாக மாறி உள்ளது.
ஆனால் பாரபட்சம் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு பக்கம் விஜய் இன்னொரு பக்கம் அஜித் மறுபக்கம் ரஜினி கமல் என அனைவரையும் பற்றி பேசி அவர்களின் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது ஒரு ஸ்ட்ராட்டஜி என்று கூறலாம் .
குறிப்பாக அஜித்தை பற்றி கூறியது அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெருமையாக இருந்தாலும் அஜித்தின் குணம் இப்படிப்பட்டதா என அனைவரும் இப்போது விமர்சித்து வருகிறார்கள். பொதுவாக அஜித் யாரைப் பற்றியும் புறம் பேசாதவர். ஆனால் சிவகார்த்திகேயன் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது அவரும் மற்றவர்களைப் பற்றி பேசக் கூடியவர் தானா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறது.
அதாவது ஒரு விழாவில் தன்னைப் பார்த்ததும் வெல்கம் டு பிக் லீக் என அஜித் சொன்னதாக குறிப்பிட்டிருந்தார். முதலில் இது எனக்கு புரியவில்லை. மறுபடியும் அதைப் பற்றி அஜித்திடம் கேட்டதற்கு உங்க வளர்ச்சியால் சில பேர் இன்செக்யூராக ஃபீல் பண்ணுகிறார்கள். அப்போ நீங்க பிக் லீக்கில் வந்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம் என கூறினாராம்.
இதுதான் இப்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து அப்போ யார் பொறாமை படுகிறார்கள் ?தனுஷை சொன்னாரா சிம்புவை சொன்னாரா ஒருவேளை விஜய் சேதுபதியை சொன்னாரா. ஆனால் தனுஷ் சிம்பு விஜய் சேதுபதி என யாருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அப்போ அஜித் சொன்னது யாரை பற்றி என அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த அளவுக்கு பேசக் கூடியவரா அஜித் என்றும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…