Connect with us

Cinema News

அமரன் பாட்டுல காதல் பொங்கி வழியுது!.. 700வது பாடலில் ஜி.வி. பிரகாஷ் மேஜிக்!.. நிஜ வாழ்க்கையில தான்?

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 700வது பாடலாக அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள “ஹே மின்னலே” பாடல் தற்போது வெளியான நிலையில், ஜி.வி. பிரகாஷின் விவாகரத்து குறித்த கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகிறது.

அமரன் படத்தின் புரோமோஷன் பணிகளை ராஜ்கமல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஹே மின்னலே பாடல் தற்போது வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கிய ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த 700 ஆவது பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. சென்னை எம்சிசி கல்லூரியில் படிக்கும் மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் உருகி உருகி காதல் செய்யும் காட்சிகளில் இடம்பெறும் பாடலாக ஏன் மின்னலே பாடல் உருவாகியுள்ளது.

ஜிவி பிரகாஷின் மேஜிக் மறுபடியும் காதல் பாடலில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில், செங்கல் சில நெட்டிசன்கள் பாடலில் காதல் பொங்கி வழிகிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் காதலித்த மனைவி சைந்தவி விட்டுவிடுவார் என மோசமாக விளாச ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த ஜிவி பிரகாஷின் அம்மா சைந்தவி நல்ல மருமகள் என்றும் அவர் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்த நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் சைந்தவி ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ரசிகர்களுக்கு சூப்பரான ட்ரீட்டாக இந்த காதல் பாடல் அமைந்துள்ளது. கேட்ட மாத்திரத்திலேயே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்த தீபாவளி அமரன் தீபாவளி தான் என்றும் ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படங்களுக்கு சிக்கல் தான் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top