Connect with us

Cinema News

அந்த விஷயத்துல ஜெயிலரை விட வேட்டையன் பெட்டர்…! அமிதாப் மட்டும் இல்லன்னா அவ்வளவு தானாம்..!

வேட்டையன் படத்தில் ரஜினி எப்படி கவர்ந்துள்ளார்னு பிரபலம் ஒருவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் படத்தை விட வேட்டையன் பெட்டர் என்று சொல்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. படம் குறித்தும் ரசிகர்களின் ரசனை குறித்தும் என்கவுண்டரில் ரஜினியின் நிலைப்பாடு குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

வழக்கமா ரஜினி படங்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஈர்க்காது. ஏன்னா கமர்ஷியல் ஜாஸ்தியா கொட்டிக் கிடக்கும். ஆனா வேட்டையன் படம் ஜெயிலர் படத்தை விட பெட்டரா இருந்துச்சு. அதுக்குக் காரணம் வழக்கமான ரஜினி படமா இல்லை.

ஒரு கதை டிராவல் பண்ணின விஷயம் பிடிச்சிருந்தது. நிஜ வாழ்க்கையில ரஜினி என்கவுண்டரை ஆதரிப்பவர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் அந்தக் கூட்டத்துல நுழைஞ்சிட்டாங்கன்னு சொன்னாரு.

அவரை வைத்து என்கவுண்டருக்கு எதிரான விஷயத்தை இயக்குனர் சொல்லி இருக்கார். அது பிடிச்சிருந்தது. வழக்கமா ஹீரோ சொல்றதும், செய்றதும்தான் சரின்னு காட்டுவாங்க. ஆனா இந்தப் படத்துல ரஜினி ஒரு விஷயத்தைப் பண்றாரு. ஆனா ஒரு கட்டத்துல அதைத் தவறுன்னு உணர்ந்துக்கிடறாரு. ஆனா எனக்கு ஒரு அதிர்ச்சி என்னன்னா ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய அளவில் ஈர்ப்பைக் கொடுக்கல.

ரசிகர்கள் ஜெயிலர் அளவுக்கு இல்லன்னு சொல்றாங்க. ரசனையில அவங்க இன்னும் தரைமட்டத்துல தான் இருக்காங்கன்னு தான் தோணுச்சு. சுருட்டுல இருந்து ரஜினியோட முகம் தெரியறது தான் அந்தப் படத்துலயே ஆகச்சிறந்த அபத்தமான காட்சி. அதுக்கு தியேட்டர்ல ரஜினி ரசிகர்கள் பயங்கரமா கிளாப் பண்றதை எல்லாம் நான் கேள்விப்பட்டேன்…!

இது ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட காட்சின்னு புரிஞ்சிக்கலாம். கல்வி வியாபாரம் ஆகுறது, நீட் தேர்வுக்காக நடத்தும் கோச்சிங் சென்டர் என பல விஷயங்கள் இருக்கு. ஏழைகளின் கல்வி, பணக்காரனுடைய வியாபாரமா ஆகிடுச்சு என்ற டயலாக் எல்லாம் பவர்புல்லான டயலாக்.

அமிதாப்பைத் தவிர அந்தக் கேரக்டரை வேற ஒருத்தர் பண்ணியிருந்தா இந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமான்னு கேட்டா சந்தேகம் தான். ரஜினியோட தப்பையே அவர் சுட்டிக்காட்டுறாரு. அந்தக் கேரக்டர் ரொம்ப சரியா இருக்கு. அவர் இல்லாமல் வேற ஒருத்தர் நடிச்சிருந்தா இந்தப் படம் இன்னும் ஒரு கசப்பான அனுபவமா மாறி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top