Connect with us

Cinema News

கமல் கொடுத்த ஐடியா.. அமரனில் வொர்க் அவுட் ஆயிருச்சு! ‘இந்தியன் 3’யையும் பாத்து பண்ணுங்கப்பா

அமரன் படம் ஹிட்டானதுக்கு கமலும் ஒரு காரணம்… உண்மையிலேயே ஒரு என்சைக்ளோபீடியாதான்

இன்று இந்தியாவே கொண்டாடும் ஒரு திரைப்படமாக மாறி இருக்கிறது அமரன் திரைப்படம். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகூர்த்த வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியன் ஆர்மிக்கு அமரன் திரைப்படம் ஒரு சமர்ப்பணம் என்று சொல்லலாம்.

அது மட்டுமல்ல மேஜர் முகுந்த் வரதராஜனை மீண்டும் நம் கண் முன் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு மறு ஜென்மம் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய அபாரமான நடிப்பால் சிவகார்த்திகேயன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

மேஜர் முகந்த் வரதராஜனாகவே இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார். படம் வெளியாகி மூன்று நாட்களில் 132 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. ஆனால் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தால் தான் அதனுடைய உண்மை தன்மை தெரிய வரும்.

இந்த நிலையில் படம் இந்த அளவுக்கு வெற்றியடைந்ததற்கு காரணம் படக்குழுவாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கமலும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. படத்தை பார்த்த கமல் படத்தில் எந்தெந்த இடங்களில் சில விஷயங்கள் மிஸ் ஆகின்றன என்பதை குறித்து வைத்துக் கொண்டாராம். அதன் பிறகு ஒட்டுமொத்த பட குழுவையும் அழைத்து இந்தந்த இடத்தில் இதை சேர்க்க வேண்டும்.

இதை நீக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கி மீண்டும் படபிடிப்பை நடத்தச் சொல்லி அனுப்பி வைத்தாராம். அதன் பிறகு ஒரு சில நாட்கள் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி கமல் சொன்ன அறிவுரைகளை எல்லாம் ஏற்று அதன்படி இயக்குனர் சில விஷயங்களை படத்தில் சேர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் இந்த அளவுக்கு தத்ரூபமாக வந்ததற்கு கமலும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதைத்தானே இந்தியன் 3 படத்திலும் கமல் சொன்னார். படத்தைப் பார்த்து இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் எடுக்க வேண்டும் என கமல் சொல்ல அதை படக்குழு ஏற்கவே இல்லை. அமரனின் பாதிப்பு லைக்கா வரைக்கும் சென்று இருப்பதாக தெரிகிறது. கமல் சொன்னதை போல முப்பது நாட்கள் ஷூட்டிங்கை எடுங்கப்பா என லைக்கா இப்போது கூறி வருகிறதாம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top