கமல் ஹாசன் தயாரித்து நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனில் அவர், ஈடுபட்டு வரும் நிலையில் சாய் ராம் கல்லூரியில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழிலிருந்து வந்தது தான் கன்னட மொழி என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. மேலும், அந்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாயத்து வெடித்த நிலையில், அதற்கு முடியாது என மறுத்துள்ளார்.
கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மொழியைப் பற்றி பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், எனது உயிரும் குடும்பமும் தமிழ் மொழி. உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தோன்றியது, எனவே நீங்களும் இந்தக் குடும்பத்தில் அடங்குவீர்கள் என்று சிவராஜ்குமாரை பெருமைப்படுத்த கூறினார். கன்னட மொழியை தமிழில் இருந்து உருவானது என எப்படி கமல்ஹாசன் கூறலாம் என கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது, கமல்ஹாசனுக்கு அது தெரியவில்லை எனக் கூறி அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சில கன்னட அமைப்புகள் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்களைக் கிழித்து, கர்நாடகாவில் படத்தைத் வெளியிடத் தடை விதிக்கக் கோரிக்கை வைத்தனர். மேலும், கர்நாடகவின் பாஜக தலைவர் விஜயேந்திரா கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கமல்ஹாசன், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தமிழ் மற்றும் கன்னட மக்களை ஒரு குடும்பமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் பேசியதாகவும் விளக்கமளித்தார். அன்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…