Categories: Cinema News OTT

பிரபாஸ் நடித்த படத்துக்கே ஓடிடியில் விற்பனை ஆகவில்லையா!.. அடிமாட்டு விலைக்கு கேட்டால் எப்படி?

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு லீடு ரோலில் நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம் வருகின்ற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் ஒடிடி உரிமத்தை விற்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணப்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ஒரு பேன் இந்தியா புராணம் மற்றும் காவியம் கலந்த ஆக்ஷன் திரைப்படமாகும். இப்படம் பக்த கண்ணப்பர் என்ற சிவபக்தரின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார், பிரம்மானந்தம், மதுசூதனன் ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் முக்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டதாக விஷ்ணு மஞ்சு அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்துக்கும் இதே போன்ற ஒரு சிக்கல் ஏற்படவே ஒரு வருடமாக ஓடிடியில் படம் வெளியாக முடியாமல் இன்று தான் வெளியானது.

தம்பி மனோஜ் மஞ்சுவுடன் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகத்தான் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருக்கலாம் என்பதை மறைமுகமாக விஷ்ணு மஞ்சுவே தெரிவித்த நிலையில், கண்ணப்பா படத்தை ஓடிடியில் வெளியிட அமேசான் பிரைம் வெறும் 1.5 கோடி மட்டுமே கொடுக்க முன் வந்திருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் உலா வருகின்றன.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெறும் 1 கோடிக்கு மட்டும் தான் வாங்கிக் கொள்ளப் போவதாக அறிவித்ததால், படக்குழு ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாக கூறுகின்றனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் கண்ணப்பா படம் உருவாகியுள்ளது. மேலும், பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால் என மல்டி ஸ்டார்கள் நடித்துள்ள இந்த படத்துக்கா ஓடிடியில் இந்த கதி என்கின்றனர்.

Saranya M
Published by
Saranya M