Connect with us

Cinema News

லப்பர் பந்து இயக்குனருக்கு அடிச்ச பம்பர் ஆஃபர்! அடுத்த படத்திற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உண்மையாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம்.. லப்பர் பந்து பட இயக்குனரின் ரேஞ்சே மாறிடுச்சு

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் நடிப்புதான் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.

படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட் ,பால சரவணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மிகக் குறுகிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்திருப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நல்ல கதைக்களத்துடன் மிகக் குறுகிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள்தான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க படுகிறதா என்றால் இல்லை. ஆனால் லப்பர் பந்து இயக்குனருக்கு ஒரு பெரிய பம்பர் ஆஃபரே அடித்திருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததும் லப்பர் பந்து படத்தின் தயாரிப்பாளர் இவரை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தனர்.

ஆனால் பேஷன் ஸ்டுடியோ அதற்குள் தமிழரசன் பச்சமுத்துவை வேறொரு படத்திற்காக அதிக அளவு சம்பளத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கோடி சம்பளம் என்ற அளவில் பேஷன் ஸ்டுடியோ தமிழரசன் பச்சமுத்துவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனமும் தமிழரசன் பச்சமுத்துவை அணுகி இருக்கிறார்கள். இதை அறிந்த பேஷன் ஸ்டுடியோ ஒரு கோடியில் இருந்து மூன்று கோடியாக அவருடைய சம்பளத்தை அதிகரித்து அவரை கமிட் செய்திருப்பதாக தெரிகிறது. அறிமுக இயக்குனராக இருந்த தமிழரசன் இப்போது இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிந்த ஒரு இயக்குனராக மாறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top