Lubber pandhu: சில சமயம் சின்ன படங்கள் கூட ஒரு பெரிய படத்திற்கு இணையான வெற்றியை பெற்றுவிடும். மலையாள மொழி படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தின் வசூலை இங்குள்ள முன்னணி நடிகர்களின் சில படங்கள் கூட பெறவில்லை.
ஒரு பெரிய படத்தோடு வெளியான சின்ன படம் அதிக வசூலை பெறும். இது சினிமாவில் அடிக்கடி நடக்கும். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து பேட்ட படம் வெளியான போது அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிக வசூலை பெற்றது.
இப்போதெல்லாம் ஓடிடி வந்துவிட்டது. தியேட்டரில் வெளியாகும் புதிய படங்கள் 4 வாரங்களில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிக்கு வந்துவிடுகிறது. விஜயின் கோட், ரஜினியின் வேட்டையன், கார்த்தியின் மெய்யழகன், ஜீவாவின் பிளாக் என எல்லாமே ஓடிடிக்கு வந்துவிட்டது.
இதில் சமீபத்தில் ஓடிடிக்கு வந்த திரைப்படம்தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சைமுத்து என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள திரைப்படம் இது. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். கிராமத்து பக்கம் இருக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அதோடு, சாதிய பாகுபாடும் இப்படத்தில் அங்கங்கே காட்டப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலை பெற்றது. அதோடு, விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டை பெற்றது. கோட் படம் ஓடிடியில் வெளியான பின்னரும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருந்தது.
அதுபோல, இப்போது லப்பர் பந்து படமும் ஓடிடியில் வெளியான பின்னரும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ரசிகர்களிடம் இந்த வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு லப்பர் பந்து படம் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…