Connect with us

Cinema News

வாயை வச்சிக்கிட்டு கம்முன்னு இருங்க தம்பி!.. மீண்டும் ட்ரோலில் சிக்கிய விஜய் சேதுபதி மகன்!…

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சொல்லி இருக்கும் ஒரு கருத்து ட்ரோலில் சிக்கியிருக்கிறது.

Suriya vijay sethupathi: இயல்பான கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என நடிப்பிலும், தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் வெரைட்டி காட்டியவர். அதனால்தான் அவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

ஏனெனில், விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் போல விஜய் சேதுபதி ஹீரோயிசம் காட்டவில்லை. 50 பேரை அடித்து நொறுக்குவதில்லை. துப்பாக்கியால் 100 பேரை சுட்டு தள்ளவில்லை. நாலு ஃபைட்டு, நாலு சண்டைக்காட்சிகள், வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சி என போரடிக்கவில்லை.

வித்தியாசமான கதைகள்.. இதுவரை மற்ற ஹீரோக்கள் செய்யாத கதாபாத்திரங்கள்தான்.. இதுதான் விஜய் சேதுபதியின் பலமாக இருக்கிறது. அதனால்தான் அவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். சில மசாலா படங்களில் நடித்திருந்தாலும் அதிலும் தனது தனித்திறமையை காட்டுபவர்.

கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் வில்லனாக கலக்கி வருகிறார். விஜயுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம், ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் என அசத்தினார். வாரிசு அரசியல் போல சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் உண்டு. விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார்.

நானும் ரவுடிதான் படத்தில் ஒரு காட்சியில் வருவார். விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் அவருடன் சூர்யாவும் பல காட்சிகளிலும் நடித்திருந்தார். அதன்பின் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்போது பீனிக்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற 14ம் தேதி வெளியாகி வருகிறது.

சூர்யா விஜய் சேதுபதி அடிக்கடி லூஸ் டாக்கிங் விட்டு ட்ரோலில் சிக்கி வருகிறார். பொனிக்‌ஷ் படம் தொடார்பான புரமோஷன் நிகழ்ச்சியில் ‘என் அப்பா வேற. நான் வேற’ என பேசினார். இப்போது ‘நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுதான் மேலே வந்தேன். என் எப்பா தினமும் செலவுக்கு வெறும் 500 ரூபா மட்டும்தாம் கொடுப்பாரு.. அதனால்தான் சினிமாவுல ஜெயிக்கணும்னு வந்திருக்கேன்’ என பேசி இருக்கிறார்.

இதையடுத்து ‘பாவம் தம்பி நீ…தினமும் 500 ரூபாய் உனக்கு கம்மியா?.. பல பேரோட தின வருமானமே அதுதான்’ என சொல்லி நெட்டிசன்கள் சூர்யா விஜய் சேதுபதியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top