Connect with us

Cinema News

திருப்பதி லட்டு விஷயத்துல சனாதன தர்மம் எங்கே இருந்து வந்துச்சு? தில்லாகக் கேட்கும் பிரகாஷ்ராஜ்

திருப்பதிக்கே அல்வாவா? செல்லம்… இதோ வந்துட்டாரு செல்லம்…

நடிகர் பிரகாஷ்ராஜைப் பார்த்தாலே நமக்கு செல்லம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் தில்லாக எந்தக் கருத்தையும் பேசக்கூடியவர். சமீபத்தில் கூட திருப்பதி லட்டு விவகாரம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களைப் போட்டு உடைத்துள்ளார்.

அவர் பேசும்போது, துணை முதல்வர் பவன் கல்யாண் எனது நண்பர் தான். சில படங்களில் பண்ணியிருக்கோம். இப்போ அரசியல்ல இருக்காரு. டெபுடி சிஎம். நான் கூட அவரிடம் பேசினேன். நான் கேள்வி கேட்டேன். நீ ஒரு ஸ்டேட்டுக்கு டெபுடி சிஎம். யாரு அதைப் பண்ணியிருக்காங்களோ உடனடியா பிடிச்சி அவங்களுக்குத் தண்டனையைக் கொடு. இதுல ஏன் பெரிய அரசியலாக்குற? ஏற்கனவே பல குழப்பங்கள் நண்பர்கள் டென்டர்ல நடந்துக்கிட்டு இருக்குன்னு சொல்கிறார் பிரகாஷ் ராஜ்.

லட்டுக்கு தயாரிக்க நெய் வருது. 1500 கிலோ நெய் தேவைப்படுது. அதைத் தயாரிக்க ஒரு நிறுவனம் இருக்கு. அதை யாருக்கோ கான்ட்ராக்ட் கொடுத்துருக்காங்க. அதுக்கான ரிப்போர்ட் வருது. அதுல கொஞ்சம் தப்பா இருக்கு. கலப்படம் இருக்குன்னு லேப் ரிப்போர்ட் சொல்லுது. ஆனா என்னன்னு சொல்ல முடியாது. பாசிபிலிட்டிங்கறாங்க.

எங்கெங்கே இருந்து நெய் எடுக்கிறாங்க? மாடுகள் மூலமா வரலாம். என்னென்ன பாலை அதற்குப் பயன்படுத்துறாங்க? அதைத்தான் சொல்றான்… அப்படின்னா இவங்க என்ன பண்ணனும்? ஜூன், ஜூலைல ரிப்போர்ட் வருது. செப்டம்பர் வரை விட்டுட்டு அந்த ஆட்சிக்காரங்கப் பண்ணினதா சொல்றாங்க. அது எப்படி சொல்லலாம்? கலந்துடுச்சுன்னு சொல்லிட்டாங்க.

அது என்னன்னு தோண்டிப் பார்த்தா அங்க 10 டிரக் நெய் வருது. அதுல 2 ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அதை லேப்புக்கு அனுப்பிருக்காங்க. அப்படின்னா நெய்யைத் தயாரிக்கிற திண்டுக்கல்ல உள்ளவருக்கிட்ட கேட்கலாம். அதை அரசியலாக்குறதுக்கு அவசியமில்ல. அது உடனே விவகாரம் ஆகுது. அதை துணை முதல்வர் எடுத்துக்கிட்டு பேசறாரு.

சனாதன தர்மத்துக்கு ஆபத்து வந்துடுச்சுன்னு. இங்க பாருப்பா இது மனிதர்கள் காசு ஆசையால செய்த தவறு. யாரு சனாதன தர்மத்தை அட்டாக் பண்ணிட்டாங்க? அது எங்கிருந்து வந்துச்சு என கேள்வி எழுப்பியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top