சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
அந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்த படமும் ரிலீஸாக வில்லை. கங்குவா திரைப்படம் மட்டும்தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் இந்தப் படத்திற்காக சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான கெட்டப்பில் இதுவரை பார்க்காத சூர்யாவை இந்தப் படத்தின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
பல மொழிகளில் ரிலீஸாக போகும் கங்குவா திரைப்படம் ஒரு பேன் இந்தியா படமாக வர இருக்கிறது. அதனால் அதன் ரிலீஸ் ஒரு சரியான நேரத்தில் இருக்க வேண்டும் என இதுவரை படக்குழு காத்திருந்தார்கள். அதற்கு சரியான தேதி அக்டோபர் 10 என அந்த தேதியை லாக் செய்திருந்தார்கள். ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதே தேதியில் ரிலீஸானதால் கங்குவா திரைப்படம் தன்னுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது.
அதனால் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கங்குவா படத்தை பற்றி இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி ஒருவர் ஞானவேல் ராஜாவிடம் கங்குவா படம் 1000 கோடி கிளப்பில் இணையுமா என்ற கேள்வியை கேட்க அதற்கு ஞானவேல்ராஜா படம் 500 கோடியை நெருங்கினாலும் 700 கோடியை நெருங்கினாலும் ஜிஎஸ்டி செல்லானை ஸ்டூடியோ கிரீன் அக்கவுண்ட்டில் டிவிட் செய்ய சொல்லிவிடுகிறேன்.அதிலிருந்து எல்லா தயாரிப்பாளர்களிடமும் ஜிஎஸ்டி செல்லானை கேட்டீங்கனா உண்மையான வசூல் என்ன என்பது தெரியவரும் என்று கூறியிருந்தார்.
மேலும் நான் 2000 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன். நீங்க என்னன்னா 1000 கோடினு சாதாரணமா சொல்றீங்க என்றும் பதில் அளித்திருந்தார் ஞானவேல் ராஜா.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…