Categories: Cinema News

படம் ரிலீஸ் ஆகும்போது ரஜினி செய்யும் காரியம்!.. சூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு பழக்கமா!…

Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையான நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 50வருடமாக இந்த சினிமாவில் பல சாதனைகளை புரிந்து மக்கள் போற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் அந்த தலக்கனம் இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறார்.

அந்த ஒரு எளிமைதான் இன்று வரை அவரை ஒரு தலைவராக பார்க்க காரணமாக அமைந்தது. சமீபத்தில் அவரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸானது. படம் அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தியது என்றே சொல்லாம். ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் போகபோக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினியை பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினி அவரின் ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்திலும் அவர் அறைக்கு சென்று தூங்கி விடுவாராம். தூங்க போகும் போது அவரின் வீட்டாரிடம் படம் என்ன மாதிரியான ரிசல்ட் வருகிறது? ஒரு வேளை பாசிட்டிவ் விமர்சனம் வந்தால் மட்டுமே என்னை இண்டர்காமில் எழுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் செல்வாராம்.

அப்படி தோல்வியாகும் பட்சத்தில் யாரும் எழுப்ப மாட்டார்களாம். அவரே எழுந்து வருவாராம். அவர் எழுந்திருக்கும் போது வெற்றி செய்தியை கேட்டு எழுந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் இந்த மாதிரியான முறையை பின்பற்றி வருகிறாராம் ரஜினி.

சமீபத்தில் கூட வேட்டையன் படக்குழு ரஜினியை நேரில் போய் சந்தித்து அவர்களின் சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்கள் .பதிலுக்கு ரஜினியும் அவர்களை பார்த்தவுடன் மிகவும் குஷியாகி விட்டாராம். எல்லாம் வேட்டையன் செய்த மேஜிக்தான். அதனை அடுத்து கூலி படத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்