ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கேரளாவில் வேட்டையன் படத்தை பார்க்க சென்ற பெண் ரசிகை ஒருவரை ரஜினிகாந்த் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்களில் புதிய படங்கள் வந்தால் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் கருத்துக்களை பப்ளிக் விமர்சனமாக பல யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்கள் கேட்டு வருகின்றன. புதிய படத்திற்கு மக்கள் என்ன விமர்சனம் கொடுக்கின்றனர் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்கள் பப்ளிக் ரிவ்யூ என்கிற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் விருப்பு வெறுப்பு கருத்துக்களை சொல்லக்கூட முடியாத அளவுக்கு ரசிகர்களின் நிலைமை மோசமாக மாறியுள்ளது. இளம் பெண் ஒருவர் வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு படத்தில் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கின்ற அளவுக்கு படத்தை இயக்குனர் இயக்கியுள்ளார் என வேட்டையன் படத்துக்கு எதிராக விமர்சனம் செய்த நிலையில், சில ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்தப் பெண்ணை சூழ்ந்து கொண்டு அது எப்படி தலைவர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுப்ப என கேள்வி கேட்டு வாக்குவாதம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்தப் பெண் ஆளை விடுங்கடா சாமி என ஓடும் அளவுக்கு ரஜினி ரசிகர்கள் கேரளாவில் கூட டார்ச்சர் செய்ததை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்தப் பெண் நிச்சயமாக விஜய் ரசிகையாக தான் இருப்பார் என்றும் வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வேட்டையன் படத்துக்கு எதிரான நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா படம் பொழுதுபோக்கு அம்சத்தை தாண்டி விமர்சன அம்சமாகவும் வசூல் ரீதியான வியாபார அம்சமாகவும் ரசிகர்களின் அளவுகடந்த எதிர்பார்ப்பு காரணமாக போட்டியும் பொறாமையும் நிலவும் இடமாகவும் மாறியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…