Cinema News
4 நாட்கள் விடுமுறை!.. ரஜினிகாந்த் மாஸ் என்ன ஆச்சு?.. வேட்டையன் மொத்த வசூல் இத்தனை கோடி தானா?..
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் அள்ளியுள்ள மொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கோட் திரைப்படம் அளவுக்கு வேட்டையன் ஓடவில்லை.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களை திருப்தி படுத்தி 600 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. அதன் பின்னர் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.
லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், வேட்டையன் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது. மேலும் முதல் நாளே விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி வேட்டையின் திரைப்படம் நல்லாவே இல்லை என சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினர்.
வேட்டையன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் முதல் பாதி பிடித்திருக்கு என்றும் இரண்டாம் பாதி சுமார் ரகம் தான் என நியூட்ரல் விமர்சனங்களையும் கொடுத்தனர். அதன் காரணமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருந்த நிலையிலும், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கூட இதுவரை எட்டவில்லை என்பது தான் உண்மை என்கின்றனர்.
வேட்டையின் திரைப்படம் அதிகபட்சமாக 180 கோடி ரூபாய் வசூலை ஞாயிற்றுக்கிழமையுடன் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தியாவில் வேட்டையின் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நான்கு நாட்களில் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் வேட்டையின் திரைப்படம் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், திங்கட்கிழமை இன்று முதல் வசூல் பெருமளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையின் திரைப்படம் அடுத்த வாரம் இறுதியில் அல்லது லைஃப் டைம் வசூல் 300 கோடி ரூபாயை தொடும் என்கின்றனர்.