Connect with us

Cinema News

ரஜினியை மீண்டும் நடிக்க வைத்த கலைஞரின் மடல்… அப்புறம் வந்த படம் என்ன தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இருந்து ஒதுங்கப் போவதாக இருக்கும்போது அவரது மனதை மாற்றிய கலைஞரின் மடல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவே வேணாம்னு முடிவு பண்ணிட்டு இருக்குற சமயம் அவரை நடிக்க வைக்கிறது கலைஞரின் மடல். என்னன்னு பார்ப்போமா…

ரஜினி கடைசி படம்னு சொல்வார் ஆனா நடிப்பாருன்னு எல்லாரும் சொல்வாங்க. ரஜினியும் அதே மாதிரி அடுத்த படத்துல நடிச்சிருவாரு. அருணாச்சலம் படத்தை நடிச்சிட்டு அதுக்கு அப்புறமா படமே பண்ணக்கூடாதுங்கற முடிவுல இருக்காரு. யார் எல்லாமோ சொல்லிப் பார்க்குறாங்க.

ஆனா வேணாங்கற முடிவுல இருக்காரு. அப்போ தலைமைச் செயலகத்துல இருந்து ஒரு பேக்ஸ் வருது. ‘மைடியர் பிரதர் ரஜினிகாந்துக்கு வெள்ளி விழா வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க தொடர்ந்து படங்களில் நடியுங்கள்’. அன்புடன் கலைஞர் மு.கருணாநிதின்னு அதுல போட்டுருக்கு. அன்றைய முதல்வர் கலைஞரிடம் இருந்து அந்த பேக்ஸ் வந்ததும் கலைஞரே உங்களை நடிக்கச் சொல்லிட்டாரு.

அந்த வெள்ளிவிழா ஆண்டை சிறப்பிக்கிற மாதிரி ஒரு படம் நடிங்கன்னு சொல்றாங்க. ரஜினியோட மனசும் மாறுது. நாம ஒதுங்கினாலும் விட மாட்டேங்கறாங்களே. நாம நடிச்சா 1000 குடும்பங்கள் பொழைக்கும் நடிக்கிறாரு. ஆனா யாரு டைரக்டர்னு ஒரு முடிவுக்கு வருது.

தளபதி படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் படம் பண்ணவில்லை. இருவர் படத்திற்குப் பிறகு நஷ்டத்துல இருக்காரு. ஆனா ரஜினியே கூப்பிட்டு படம் பண்ணலாம்னு சொன்னதும் அவரே உற்சாகம் ஆகிடுறாரு. ஆனா அது என்னாச்சுன்னு தெரியல.

அப்படியே அந்;த புராஜெக்ட் ஓரமா ஒதுங்கிடுச்சு. அப்போ சூர்யவம்சம் தாறுமாறான ஹிட். உடனே டைரக்டர் விக்ரமனைக் கூப்பிட்டு சொல்றாரு. அது ஒரு பக்கமாக போய்க்கிட்டு இருக்கு. ஆனா அதுவும் முடியாமல் போகுது. கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரை ‘டிக்’ பண்றார் ரஜினி. காரணம் அவ்வை சண்முகி தான். அதுல பல கேரக்டர். நல்லா ஹிட். பீம்சிங்குக்கு அப்புறமா இவரைத் தான் பார்க்குறேன்னு சொல்றாரு.

அதே மாதிரி படம் வேணும்னு சொல்றாரு. சிங்கிள் லைன் தான் படம். ‘அதிகமாக ஆசைப்பட்ட ஆணும், அதிகமா கோபப்பட்ட பொம்பளையும் வாழ்க்கையில உருப்பட்டதா சரித்திரம் இல்லை’ன்னு வரும். அது தான் படையப்பா. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top