Connect with us

Cinema News

Thalapathy69: கோடிகளை கொட்டும் கோலிவுட்!.. அனல் பறக்கும் தளபதி 69 பிஸ்னஸ்!..

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமைக்கு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அறியப்பட்டவர் நடிகர் விஜய். இவர் தற்போது தனது கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு பிறகு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் இறுதி படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த 5ம் தேதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கி வருகின்றார். இப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள் கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனம்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். இவர்களுடன் பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். பூஜை ஆரம்பித்த மறுநாளே படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு முதல் ஷெடுலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதல் ஷெடுயூலை முடித்துவிட்டு நடிகர் விஜய் தனது மாநாட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காமினேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் ஆரம்பம் முதலே படம் கல்லாகட்ட தொடங்கி இருக்கின்றது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துபாயை சேர்ந்த பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்குவதற்கு போட்டா போட்டி நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற காரணத்தால் விநியோகிஸ்தர்கள் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு இப்படத்தை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியிட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு கை மாறியதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் லலித் 100 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பேசியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 99 சதவீதம் அவருக்கு தான் இந்த படம் என்பது உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையே இவ்வளவு கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top