Connect with us

Cinema News

இது செம ரொமான்ஸ் வாக்கிங்!.. அஜித்துடன் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த ஷாலினி!. செம வைரல்…

அஜித்துடன் ஷாலினி எடுத்த செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜீத்தும், ஷாலினியும் காதல் மணம் புரிந்த தம்பதியர். இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து அழகாக வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது அவர்களது வாழ்க்கை.

ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக அவர்கள் கவனம் செலுத்தி அதை சரி செய்து விடுகின்றனர். சமீபத்தில் கூட ஷாலினி மருத்துவமனையில் சின்ன அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதற்காக விடாமுயற்சி சூட்டிங்கில் அஜர்பைஜானில் இருந்த போதும் அஜீத் உடனடியாக வந்து பார்க்க வந்தார்.

அந்த வகையில் இவர்கள் தங்கள் குழந்தைகளையும் நன்கு கவனித்து வளர்க்கின்றனர். மகன் ஆத்விக்கிற்கு கால்பந்து பிடிக்கும் என்பதற்காகவே ஸ்பெயின் கூட்டிச் சென்று போட்டியைக் காணச் செய்துள்ளனர்.

ஒரு படத்தை முடித்து விட்டு அஜீத் குடும்பத்துடன் வெளிநாடு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவரது மகன் ஆத்விக்கிற்கு கால்பந்து என்றால் அலாதி ஆர்வமாம். அதற்காக ஸ்பெயின் நாட்டில் நடக்கும் போட்டியைக் காண்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு அஜீத், ஷாலினி சென்று இருக்கிறார்கள்.

அஜீத்தைப் பொருத்தவரை எவ்வளவு பிசியாக இருந்தாலும் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த அவர் இப்போது குட்பேட் அக்லியில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது அஜீத், ஷாலினி இருவரும் ஸ்டைலாக ஸ்பெயின்தெருக்களில் ஹாயாக நடந்து வருகின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

கருப்பு கோட் சூட் கூலிங் கிளாஸ் உடன் அஜீத்தும், ப்ரீ ஹேர் ஸ்டைலுடன் ஷாலினியும் புன்சிரிப்பு பூத்தபடி வருகிறார்கள். அஜீத் கேஷூவலாக நடப்பதே மாஸாகத் தான் உள்ளது. அதனால் தான் ‘தல போல வருமா’ என்று பாடல் கூட எழுதினார்கள் போல.

இதற்கான கமெண்டுகளைப் படித்தால் ரசிகர்களின் ரசனையின் உச்சத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரம் பேர் வந்தாலும் அஜித் ஆக முடியாது, தலை கீழே நின்னாலும் தல ஆக முடியாது என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார். வீடியோ வெளியாகி 2 மணி நேரத்திற்குள் 88,914 லைக்குகள் இன்ஸ்டாவில் மட்டும் கிடைத்துள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top