Connect with us

Cinema News

டேட்டிங்கா கூப்பிடுற… விஷம் குடிச்சிச் செத்துருன்னு சொன்ன சுசித்ரா…! அட அவரா அது!

இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா சுசித்ராவை டேட்டிங் கூப்பிட்டாராம். அதற்கு சுசித்ரா சொன்னது தான் வைரல்.

பாடகி சுசித்ரா ரேடியோ மிர்ச்சியில் முதலில் ஆர்ஜேவாக பணியாற்றினார். பெரும் புகழ் கிடைத்தது. அதன் மூலம் பிரபலமானார். அவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளியிட்டார்.

இது பல்வேறு விமர்சனங்களுக்கு அவரை ஆளாக்கியது. கவிஞர் வைரமுத்துவையும் கூட அவர் விட்டு வைக்கவில்லை. இவரைக் குறித்து பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

தன்னை வீட்டுக்கு அழைத்ததாகவும், தனியா வருவீங்கன்னு நினைச்சேன் என்றதாகவும் எல்லாப் பாடகிகளுக்கும் இது போன்று தொல்லை கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு வைரமுத்துவும் அது ஒரு வகையான மனநோய் என சூசகமாக பதிலடி கொடுத்து இருந்தார்.

தனுஷ் குறித்து பேசியது பல அதிர்வலைகளை உண்டாக்கியது. அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்களையும் வெளியிட்டாராம். அடுத்த ஜென்மத்திலாவது நடிகர் சூர்யா என் கணவராக வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயுத எழுத்து படத்தில் அவருடன் நடித்த போது அவரையே நான் பார்த்துக் கொண்டு இருந்தேன். மணிரத்னம் என்னைத் திட்டி விட்டார் என்கிறார்.

பாடகி சுசித்ராவிடம் இளையராஜாவின் மகன் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படி கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டால் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தான் இருக்கும். அப்படி ஒரு நெத்தி அடி பதிலைச் சொல்லி விட்டார். அது சரி. கார்த்திக் ராஜா அப்படி என்ன பெரிசா கேள்வியைக் கேட்டுவிட்டார். வாங்க பார்க்கலாம்.

ஒருமுறை கார்த்திக் ராஜா என்னிடம், ‘நான் காதலிக்காமல் திருமணம் செய்து விட்டேன். எனக்கு டேட்டிங் என்றால் என்னவென்று தெரியாது. ஆகையால் என்னை ஒரு டேட்டுக்குக் கூட்டிச் செல்வாயா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இப்படி நீ என்னிடம் கேட்டதற்கு ஒரு பாட்டில் விஷம் குடித்து செத்துப் போ’ என்று சொல்லி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top