கோலிவுட்டில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக அனைவரும் சிவகார்த்திகேயன் பற்றி தான் பேசி வருகிறார்கள். ஒரு பக்கம் விஜய் அரசியலுக்குப் போக இருக்கிறார். அஜித் ரேசில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு சினிமா என்பதுதான் ஒரு பொழுதுபோக்கு.
அதனால் விஜய்க்கு அடுத்தபடியாக அவருடைய இடத்தை யார் நிரப்புவார் என்ற ஒரு கேள்விக்கு அனைவரும் சிவகார்த்திகேயன் தான் என கூறி வருகிறார்கள் .அந்த அளவுக்கு தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் ஒரு நல்ல அபிமானத்தை பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஏன் ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்த திரைப்படத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் வரும் 31ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக வர இருக்கின்றது.
ராணுவ அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்காக உண்மையிலேயே ராணுவ முகாமிற்கு சென்று பயிற்சி எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அசல் ஒரு ராணுவ அதிகாரியாகவே இந்த படத்தில் வாழ்ந்தார் சிவகார்த்திகேயன் என அந்த படத்தில் நடித்த சக நடிகர்கள் பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டிக்கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் அவர் முக்கியமாக கவனம் செலுத்தும் படமாக பார்க்கிங் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்திருப்பது தான்.
இந்த தகவல் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றன. பார்க்கிங் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அந்த படம் எப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது என் அனைவருக்குமே தெரியும். நல்ல கதைகளத்தோடு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
ஒரு வாழ்வியல் எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது பார்க்கிங் திரைப்படம் .அனைவர் வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினையை மையமாக வைத்து தான் இந்த படம் வெளியானது. அந்த படம் வெளியானதுமே படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை சிவகார்த்திகேயன் அழைத்து பாராட்டி கூடிய சீக்கிரம் நாம் ஒரு படத்தில் இணைவோம். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை பாருங்கள் என சொல்லி இருந்தாராம்.
அதனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனுக்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி அதை சிவகார்த்திகேயனிடமும் போய் காட்டி இருக்கிறார். உடனே அந்தக் கதை மிகவும் பிடித்து போக பாலகிருஷ்ணனுக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டு விட்டதாம். கூடிய சீக்கிரம் இந்த படம் தொடங்கும் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…