சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீஸாக அமரன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பொதுவாக தமிழ் ரசிகர்களிடம் பிரேமம் படத்திற்கு பிறகு சாய் பல்லவியின் மீது பெருமளவு வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை பெண்ணாக இருந்தாலும் மலையாளத்தில் தான் அவருக்கு நல்ல ஒரு மார்க்கெட் இருக்கிறது.
அதையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் சாய்பல்லவி. யதார்த்தமான நடிப்பு ஆடம்பரம் இல்லாத தோற்றம் என அச்சு அசலாக பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சாய் பல்லவி.
நேற்று அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு அமரன் திரைப்பட குழு உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு அமரன் திரைப்படத்தை பற்றியும் அதன் உருவான கதை பற்றியும் சிவகார்த்திகேயனை பற்றியும் பாராட்டி பேசி இருந்தார்கள்.
அப்போது சாய் பல்லவியை பற்றி சிவகார்த்திகேயன் கூறிய ஒரு செய்தி அனைவர் மத்தியில் ரசிக்கும் படியாக அமைந்தது. அதாவது விஜய் டிவியில் இருக்கும் போதே சாய் பல்லவி தனக்குத் தெரியும். அவருடன் பழகி இருக்கிறேன் என கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். பிரேமம் படம் ரிலீசான போது அந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்து மிகவும் ரசித்தேன்.
உடனே சாய் பல்லவியின் நம்பரை வாங்கி அவருக்கு போன் செய்து படத்தைப் பற்றியும் அவருடைய நடிப்பை பற்றியும் பாராட்டி கூறினேன். அதற்கு சாய் பல்லவி நன்றி அண்ணா என திரும்பத் திரும்ப அண்ணா என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதைக் கேட்டதும் என் மனசு உடைந்து விட்டது என அந்த மேடையில் கூறி அனைவரையும் கலகலப்பாக்கினார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு இந்தப் படத்தில் தான் இருவரும் சேர்ந்து முதன் முறையாக நடித்திருக்கிறோம் என்றும் பேசி இருந்தார் சிவகார்த்திகேயன்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…